குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 52 பேரை இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அனுப்பி வைத்துள்ளது.  

குறித்த பணிப்பெண்கள் பணியாற்றிய வீடுகளில் பாரிய தொந்தரவுக்கும் பிரச்சினைக்கும் உள்ளான நிலையில் இன்று அவர்கள் தாய்நாடுதிரும்பியுள்ளனர். 



குறித்த பெண்கள் இன்று காலை குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த பெண்கள் தங்கியிருந்து பணியாற்றிய வீடுகளில் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும் தொந்தரவுக்குள்ளானதாகவும் குவைத்திலுள்ள இலங்கை  தூதரகத்துக்கு அறிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில்  குறித்த பணிப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புகார் செய்துவிட்டு  தங்களின் ஊருகளுக்கு சென்றுள்ளனர்.