மஹபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்த்தன இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று முதல் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் சகல தகவல்களையும் புதிய இணையத்தளத்தில்  www.mahapola.lk பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

அத்தோடு 1,500 கோடி ரூபாவாகவுள்ள புலமைப் பரிசில் நிதியத்தை 2000 கோடி வரை உயர்த்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்க நிருவாகத்தின்போது  மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதில் பிரச்சினைகள் இருந்தன. தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக இதனை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)