கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா அகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் நேற்றைய தினம் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியதை அடுத்த மண்சரிவு தொடர்பான ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல, பல்லேகம மற்றும் வில்கமுவ பிரதேச செயலகங்களிற்கு உட்பட்ட பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த  மண்சரிவு எச்சரிக்கை இன்று இரவு 8.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர சுட்டிக்காட்டியுள்ளார்.

மழையுடன் கூடிய வானிலையால் மிகவும் அவதானமாக செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.