மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குரல் பதிவுகளை ரஞ்சனினால் வெளியிட முடியுமா ?  மஹிந்தானந்த கேள்வி

Published By: R. Kalaichelvan

22 Jan, 2020 | 10:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தான் ஒரு மனநோயாளி என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஊடாக  நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார். என தெரிவித்த மின்வலு  இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகாக்கலில்  தொடர்பான குரல் பதிவுகளை முடிந்தால் வெளியிடவும் எனவும் சவால் விடுத்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 கைது செய்யப்பட்ட  விளக்மறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின்  பாராளுமன்ற உரை இன்று  பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. 

அவரது உரையின் போது ஏன் ஆளும்  தரப்பினர்  எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்  ராமநாயக்கவின் மீது நியாயம் இருப்பதாகவும் சிலர் குறிப்பிடுகின்றார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் கீழ்த்தரமான செயற்பாடுகளை நாட்டு மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆளும் தரப்பினர் அமைதி காத்தோம்.

பிறர் குடும்பத்தில் என்ன பிரச்சினைகள் உள்ளது. எவர் திருமணமான விவாகரத்து செய்துள்ளார்கள் என்பதை ஆராய்வதற்காக மக்கள்  பிரதிநிதிகளை தெரிவு செய்து  பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் பொறுப்பு தனதாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார். அவ்வாறாயின் பொலிஸ், நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படவில்லை என்றா  இவர் குறிப்பிடுகின்றார்.

தான் ஒரு மனநோயாளி என்பதை  பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஊடாக  தெளிவுப்படுத்தியுள்ளார்.

குரல் பதிவுகள் தொடர்பில் ஆராய  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளமை   அவசியமற்றது.

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளின் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19