ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆராயவுள்ளதாக கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி இது குறித்து கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.