(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

யாழ். பல்கலைக்கழக மாணவி கொலைசெய்யப்பட்டதன் பின்னணி என்ன? இது குறித்த உண்மையைக்கூறி பொறுப்பேற்கும் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இன்று நாட்டில் இல்லாதமை மிகப்பெரிய பிரச்சினை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி சபையில் தெரிவித்தார். 

அத்துடன் நாட்டின் பாதுகாப்பு உறுதிபடுத்த வருவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டின், மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்காது உள்ளது. மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்துவதாக எண்ணி பெரும்பான்மை மக்கள் கொடுத்த வரத்தை இந்த அரசாங்கம் கருத்தில் கொள்ளாது செயற்படுகின்றது என்பதே தெரிகின்றது. இதற்கு நல்ல உதாரணம் இன்று இந்த மாணவியின் கொலை மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிர்மாணத் தொழில் அபிவிருத்தி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.