(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

வவுனியா அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதன் பின்னணியை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழ் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் அரசாங்கம் இனவாத ரீதியில் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.  

30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராக மன்னாரில் இருந்தார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மாற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.