(எம்.எப்.எம்.பஸீர்)

இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பனிப்பாளர் நாயகம்  ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன  தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக டில்ருக்ஷி டயஸ் நியமிக்கப்ப்ட்டிருந்த நிலையில் அவர் கடந்த 2016 இல்  தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதனையடுத்தே அப்பதவிக்கு சரத் ஜயமான்ன நியமிக்கப்ப்ட்டார். அவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்படும் போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஷிட்டர் ஜெனரலாக கடமையாற்றிக்கொன்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக் குழு விசாரணைகளில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தல், இலஞ்ச ஊழல் சட்டத்தை தனியார் நிறுவங்களும் ஏற்றாற் போல் மாற்றி திருத்த முயற்சிகளையும் முன்னெடுத்திருந்தார்.

இந் நிலையிலேயே தற்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பனிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள அவருக்கு  இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் விஷேட பிரியாவிடையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.