(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

19 ஆம் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியால் பாதுகாப்பு அமைச்சினை வைத்திருக்க முடியாது. அவ்வாறு இருக்கையில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் கேள்வி எழுப்பினார். 

ஜனாதிபதிக்கும் - பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகின்றது, பாதுகாப்பு அமைச்சை கொடுப்பதில் அண்ணன்  தம்பிக்கு இடையில் சந்தேகம் உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினார். 

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களாகின்றது. நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும்க் மக்களின் பாதுகாப்பு குறித்தே கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்டது. அப்படி இருக்கையில் இன்று இரண்டு மாதங்களாகியும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லை. யார் பாதுகாப்பு அமைச்சர், பிரதமருக்கா இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, சபையில் இருக்கும் அமைச்சர் சுமேதா ஜெயசேன இதற்கு பதில் தெரிவிக்க முடியுமா? 

அமைச்சர் சுமேதா ஜெயசேன :- ஆம், பாதுகாப்பு அமைச்சு பிரதமர் வசமே உள்ளது. 

விஜித ஹேரத்:- பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவா?

அமைச்சர் சுமேதா :- ஆம், மேலும் சில அமைச்சுக்களுடன் பாதுகாப்பு அமைச்சும் அவரின் கீழ் உள்ளத்கு. 

விஜித ஹேரத் :- இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பாக என்பது உறுதிப்படுத்த முடியுமா? 

அமைச்சர் சுமேதா :- மௌனம் காத்தார்.