ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன  தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்துள்ள நிலையில் நிலவியுள்ள குறித்த வெற்றிடத்துக்கு சிவில் சமூக ஆர்வலர் சமன் ரத்னபிரிய நியமிக்கப்படடுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன  தனது பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.  

இவ்வாண்டு ஜனவரி 20ஆம் திகதி முதல் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க இன்று புதன்கிழமை சபையில் அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு செயலாளர் நாயகம் உள்ளிட்ட பாராளுமன்ற பணியாட் தொகுதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் ஜயம்பதி விக்ரமரட்ன தனது இராஜினாமா கடிதத்தில் சுட்டிக்கட்டியுள்ளார்.