வேலையில்லா பட்டதாரிகள் 35,000 பேருக்கு தொழில் வாய்ப்புகளை  பெற்று தருவது தொடர்பில் இன்னும் ஒரு வார காலப்பகுதிக்குள் அறிவிக்கப்படும் என  ஜனாதிபதி செயலாளர் ரோஹன அபேரத்ன உறுதியளித்திருப்பதாக தெரிவித்த இலங்கை வேலையில்லா பட்டதாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் தென்னே ஜானனந்த தேரர்,  அவ்வாறு வழங்க தாமதாகும் பட்சத்தில் அணைத்து நாடளாவிய ரீதியில் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர்பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பர் எனவும் தெரிவித்தார்.

 

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு இன்று  வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் பேரணியாக ஜனாதிபதி செயலகதிற்கு முன்பாக சென்றனர். 

இதன்போது ஜானதிபதியுடனான சந்திப்பிற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் செயலாளர் ரோஹன அபேரத்னவுடன் பேச்சுவார்த்தை வாய்ப்பளிக்கப்ட்டது.

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடலுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வேலையில்லா பட்டதாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் தென்னே ஜானனந்த தேரர் கூறுகையில் , 

வேலையில்லா பட்டத்ரிகளுக்கு ஏற்ற தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடமும் கோரிக்கைகள் முன்வைத்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதும் அதற்கான எவ்வித தீர்வுகளும் கிடைக்கபெறவில்லை.

தற்போது ஜனாதிபதி  கோதாபய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் ஏமாற்றும் வகையிலே அமைந்துள்ளன.

வேலையில்லா பட்டதாரிகள் 35ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை ஒன்றின் ஊடாகவோ அல்லது அறிவிப்பதாக  இன்றைய சந்திப்பின் போது ஜானதிபதி செயலாளர் உறுதியளித்தார்.

அடுத்த ஒரு வார காலப்பகுதிக்குள் இதற்கான தீர்வு கிடைக்க பெறாவிடின் மீண்டும் இலங்கையின் நாடளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ள்ளோம். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்போது அதில் 10.3 வீதத்தை அங்கவீனமடைந்த பட்டதாறிகளில்வழங்கப்பட வேண்டும். ஆயினும் கடந்த அரசாங்கம் அதனை கவனத்தில்கொள்ளவில்லை.   நடப்பு அரசாங்கம் அதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

2017ம் ஆண்டு தொடக்கம் மீண்டும் மீண்டும் பட்டதாரிகளை நேர்முக பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றனர். ஆனால் ஏற்கனவே நேர்முகப்பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. எவ்வித வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவிலை. இவ்வாறான செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும். 

2018 - 2019ம் ஆண்டுக்களில் நேர்முகப்பரீட்சை மேற்கொள்ளப்பட்ட பட்டத்ரிகளின் அனைத்து தகவல்களும்  தேசிய கொள்கைகள மற்றும் பொருளாதார அமைச்சில் உள்ளன. மீண்டும் இவர்களை நேர்முக பரீட்சைக்கு உற்படுத்துதல் என்பது அனைவரையும் சிக்கல் நிலைக்கு தள்ளும். அவர்களுக்கான பதவிகள் வழங்குவது மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளதாக குறிப்பிட்டார்.