இங்கிலாந்து சிறைச்சாலையில் கைதிகளின் இறப்பு வெகுவாக அதிகரிகத்து வருவதாக இன்குயிஸ்ட் ( INQUEST ) என்ற அமைப்பின் விசாரணை குழு தெரிவித்துள்ளது.

ஒவ்வரு வாராமும் 6 கைதி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதாக அவ் விசாரணை குழு தெரிவித்துள்ளது.

விசாரணை குழுவின் புள்ளிவிவரங்கள், சராசரியாக ஒரு கைதி ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒரு முறை தற்கொலை செய்துக்கொள்வதாக தெரிவிக்கின்றது.

அத்தோடு அந்நாட்டு நீதி அமைச்சின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் சுமார் 166 கைதிகள் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்கின்றனர்.

அத்தோடு கடந்த 2019 ஆம் ஆண்டு 12 மாதங்களில் 308 பேர் சிறையில் இறந்துள்ளதாகவும் விசாரணைகளின் ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதில் 158 பேர் இயற்கை மரணம் தழுவியதாக சுட்டிக்காட்டிய  INQUEST அமைப்பின் விசாரணை குழு 90 பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு குறித்த மரணங்கள் , கைதிகளுக்கு ஏற்படும் இவ்வாறான சம்பவங்களை குறைக்க முடியுமான அளவு அரசு கவனம் செலுத்த வேண்டுமென விசாரணை குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.