ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதை அடுத்து அங்கு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ அதிகாரி ஒருவரும்  சிறப்பு பொலிஸ் அதிகாரி (SPO)  ஒருவரும்  கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் க்ரூ பகுதியில் தீவிரவாதிகளை வெளியேற்றும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட பின்னர்  இரண்டாவது நாளகவும் புதன்கிழமை காலை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பள்ளத்தாக்கில் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில்  டிஜிபி  ”பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தெற்கு காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிகரமான செயல்பாடுகள் உள்ளன, அவை அதே முறையில் தொடரும். மக்களுக்காகவும், ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவும் நாங்கள் கடுமையாக உழைப்போம்,” என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க 'வரையறுக்கப்பட்ட விருப்பங்கள்' உள்ளன என்று அமெரிக்க சிஆர்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.