சீனாவைச் சேர்ந்த  15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் 60 வயது பெண் போன்று தோற்றமளிக்கின்றார். 

குறித்த மாணவி அரிதான நோயால் பாதிக்கப்பட்டதால் சிறிய வயதிலேயே முதியவர் போன்று தோற்றமளிக்கின்றார். 

கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி அன்று  வைத்தியர்கள் அவரது தோலை அகற்றி, அவரது மூக்கு, வாய் மற்றும் புருவங்களை மாற்றியமைத்து அறுவைசிகிச்சை செய்து சாதாரண நிலைக்கு மாற்றியுள்ளனர். 

குறித்த மாணவி தெரிவிக்கையில்,

நான் பாடசாலைக்குச் செல்வதற்கு  விருப்பமில்லை என்னை அனைவரும் வித்தியாசமான முறையில் பார்த்தார். 

பாடசாலைக்குச் செல்லும் எனது நண்பிகள் என்னைத் தவறாகப் பேசுவார்கள், மற்றும் தாயுடன் ஊருக்குச் செல்லும் போது அனைவரும் கூடி நின்றுகொண்டு இழிவாகப் பேசுவார்கள்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எனது முகத்  தோற்றத்தை  பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சை மூலம் மாற்றம் செய்துள்ளேன். இப்போது அனைவரும் என்னை நண்பிகளாக ஏற்றுக்கொண்டார்கள் எனத் தெரிவித்தார்.