சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில்  தீபிகா படுகோனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 50-ஆவது உலகப்பொருளாதார கூட்டமைப்பு மாநாடு ஆரம்பமாகிய நடைபெற்று வருகிறது.

சர்வதேச அளவில் உச்சபட்ச அந்தஸ்து பெற்ற பிரபலங்கள் அரங்கை அலங்கரித்துள்ளனர்.

நடப்பாண்டிற்கான மாநாடு 'ஒத்திசைந்த நிலையான பங்குதாரர்களை உருவாக்குவது' என்ற மூலக் கருவைக் கொண்டு நடைபெறுகின்றது.

உலக நாடுகளைச் சேர்ந்த உச்சபட்ச அந்தஸ்து கொண்ட தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சர்வதேச கிறிஸ்ட்டல் விருது‌கள் விழாவுடன் ஆரம்பமாகிய மாநாட்டில் பொலலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வுக்கான விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய தீபிகா, பிற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது போலவே ம‌‌னநோய்க்கும் சிகிச்சை அளிக்க இயலும், தற்கொலை என்பது தீர்வாகாது என மக்களை கேட்டுக்கொண்டார்.