கற்பிட்டியிலிருந்து கொழும்புக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் கேரளா கஞ்சாவை தனியார் பஸ் ஒன்றில் கடத்திச்செல்ல முற்பட்டபோது  பாலாவியில் வைத்து குறித்த பஸ்ஸை  மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது குறித்த பஸ்ஸினுல் 170 கிலோ கிராம் 74 கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகத்தின்  பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்பபண்ணி கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருடன் (Narcotic) இனைந்து குறித்த சுற்றி வளைப்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது  பஸ்ஸினுல் மிதிப்பலகைக்கு அடியில்  சூற்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட பஸ் ஆகியன புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.