கனடாவில் மேகன் காணப்படும் படங்களை அந்த நாட்டின் பத்திரிகைகளும் இணையத்தளங்களும் வெளியிட்டுள்ளதை தொடர்ந்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என ஹரியும் அவரது மனைவியும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹரியும் மேகன் மார்க்கலும்  கனடாவில் தங்கள் புதுவாழ்க்கையை ஆரம்பித்துள்ளதை காண்பிக்கும் புகைப்படங்கள் காணப்படுகின்றன.

வான்குவரில் மேகன் மார்க்கல்  தனது கைக்குழந்தையுடனும் இரு நாய்களுடனும் சிரித்தபடி வீதியில் நடந்துசெல்லும் படங்கள் வெளியாகியுள்ளன.

வான்குவர் தீவில் 14 மில்லியன் டொலர் செலவில் ஹரி மேர்கன் தம்பதியினர் ஆடம்பர பங்களாவிற்கு அருகில் உள்ள ஹோர்த் ஹில் பூங்காவிற்கு அருகில் மேர்கன் நடந்து செல்வதையும் அவரிற்கு பின்னால் இருபாதுகாப்பு அதிகாரிகள் செல்வதையும் படங்களில் காணமுடிகின்றது.

இந்த படங்களை பற்றைகளிற்குள்ஒளிந்திருந்த புகைப்படப்பிடிப்பாளர்கள் எடுத்துள்ளனர் என ஹரிதம்பதியினரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

படமெடுப்பதற்கு மேகன் அனுமதியளிக்கவில்லை அவர் துன்புறுத்தலிற்குள்ளானார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தாங்கள் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹரிதம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கியிருக்கும் பங்களாவிற்கு அருகில் பப்பராசி நடவடிக்கைகள் இடம்பெறுவது குறித்து  ஹரி தம்பதியினர் கலக்கமடைந்துள்ளனர் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரி தம்பதியினர் வசிக்க தொடங்கியுள்ள  பங்களாவிற்கு வெளியே பப்பராசிகள் முகாமிட்டுள்ளனர் அவர்கள் நவீன கமராக்களை வைத்து பங்களாவிற்குள் நடக்கும் நடவடிக்கைகளை பதிவு செய்ய முயல்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.