காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் புதிய பரி­மா­ணத்­துக்குள் பிர­வே­சித்திருக்­ கின்­றது. முடி­வின்றி தொடர்­கின்ற இந் தப் பிரச்­சி­னைக்குத் தீர்வுகாணப்­பட வேண்டும் என்­ப­தற்­கான போராட்­டங்கள் வருடக் கணக்­காகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. நிலை­மா­று­கால நீதியின் அடிப்­ப­டையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பொறுப்புக் கூறு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட  காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­முறை செயல் வல்­லமை அற்ற நிலையில் தேங்கி நிற்­கின்­றது.

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் காணா மல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் புதிய பரி­ மா­ணத்­துக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்றது. காணாமல் போன­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டு விட்டார்கள் என்று இப் போது அர­சாங்­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள் ளது.

ஐ.நா.வின் இலங்­கைக்­கான இணைப்­பாளர் அனா சிங்­க­ருக்கும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வுக்கும் இடை­யி­லான சந்­திப்­பின்­போது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர் கள் பற்­றிய விடயம் பற்றி குறிப்­பிட்ட ஜனா­தி­பதி, அவர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டனர் என கூறி­யி­ருந்தார். இதனை ஜனா­தி­பதி அலு­வ­லக செய்­திக்­கு­றிப்பு அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யிட்­டி­ருந்­தது.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான யுத்த மோதல்­க­ளின்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர் கள் காணாமல் போயுள்­ளார்கள். இவர்கள் அரச தரப்­பி­னரால் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட குடும்­ பங்­களைச் சேர்ந்த­வர்­களும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் குற்றம் சுமத் தியுள்­ளன. இந்த வகையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்­கான பொறுப்புக்கூறும் விட­யத்தில்  இலங்­கையில் ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டமை என்­பது மிகவும் பார­தூ­ர­மான ஒரு விட­ய­மா­கவும் தீர்வு காணப்­ப­டாத ஒரு விட­ய­மா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றது.

காணாமல் போன­வர்கள் பல்­வேறு சந்­ தர்ப்­பங்­களில், காணாமல் ஆக்­கப்­பட்­டார் கள். இதனை இந்த விவ­காரம் குறித்த விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­காக அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட ஒன்­றுக்கும் மேற்­பட்ட ஆணைக்­கு­ழு­வி­ன­ரிடம் சாட்­சி­ய­ம­ளித்த பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த உற­வி­னர்கள் ஆதா­ரங்­க­ளுடன் தெரி­வித்­தி­ருந்­தனர்.

உயிர்த்­து­டிப்பு கொண்ட

எரியும் பிரச்­சினை

இந்த விவ­காரம் குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. காணாமல் ஆக்கப்­ பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் பொறு ப்புக்கூற வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவை இந்த விடயம் தொடர்பில் பிரே­ர­ணை­களை நிறை­வேற்றி அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இந்த வகையில் இலங்­கையின் காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம் ஓர் எரியும் பிரச்­சி­னை­யாக இன்னும் சர்­வ­தேச மட்­டத்தில் உயிர்த்­து­டிப்­புடன் தொடர்­கின்­றது.

பொறுப்புக் கூறு­வ­தற்­கான பொறிமுறை­ களை உரு­வாக்கி உரிய நட­வ­டிக்­கைகளை மேற்­கொண்டு நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்­டு­மாறு ஐ.நா.வின் பிரே­ர­ணைகள் இலங்கை அர­சாங்­கத்தைப் பல தட­வை­களில் கோரி­யுள்­ளன. இந்தக் கோரிக்கை தொடர்­பி­லான ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணை­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்கி அவற்றை தீர்­மா­னங்­க­ளாக நிறை­வேற்­று­வ­தற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது என்­பது பலரும் அறிந்த விடயம்.

பொறுப்புக் கூறு­வ­தற்­கான நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கு­ரிய பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் கடந்த அர­சாங்க காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.  குறிப்­பாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறு­வ­தற்­காக காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­மு­றையை உரு­வாக்கி அதற்­கான ஆள­ணி­களை நிய­மித்து மாகாண, மாவட்ட மட்­டங்­க­ளிலும் துணை அலு­வ­ல­கங்­களை அரசு உரு­வாக்கியிருந்­தது.

ஆனாலும் அந்த அலு­வ­ல­கத்­தினால் நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்த விசா­ர­ணைகள் எதிர்­பார்த்த வகையில் நடத்­தப்­ப­ட­வில்லை.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பா­ன பொறி­முறை உரு­வாக்­கத்தில் ஐ.நா. அறி­வித்­தி­ருந்­த­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­களின் பங்­க­ளிப்பு இல்­லா­ம­லேயே அதற்­கான அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­டது. தன்­னிச்சைப் போக்­கி­லான இந்த நட­வ­டிக்­கையை பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் வன்­மை­யாகக் கண்­டித்­தி­ருந்­தன. அரசு உரு­வாக்­கி­யுள்ள அலு­வ­ல­கத்தில் நம்­பிக்கை யில்லை என தெரி­வித்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் ஆர்ப்­பாட்­டங்­களின் ஊடாகத் தமது எதிர்ப்பை  பல தட­வைகள் வெளி­யிட்­டி­ருந்­தனர்.  

ஆனால் எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யிலும் அந்த அலு­வ­லகம் உரு­வாக்­கப்­பட்­டது. அந்த வகையில் யாழ்ப்­பா­ணத்தில் அமைந்த அலு­வ­ல­கத்தைத் திறந்து வைக்கும் நிகழ்­வுக்கு எதி­ரான எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை முறி­ய­டிக்கும் வகையில் அதி­காலைப் பொழுதில் பார்­வை­யா­ளர்கள், பங்­க­ாளர்­க­ளான காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்­களின் பங்­க­ளிப்பின்றி இர­க­சி­ய­மாக அதி­கா­ரிகள் சென்று அதனை வைப­வ­ரீ­தி­யாகத் திறந்­து­விட்டு கத­வு­களைப் பூட்­டி­விட்டுச் சென்­றார்கள்.

அர்த்­த­மில்­லா­தது....

இத்­த­கைய திறப்பு விழா நிகழ்வைத் தொடர்ந்து யாழ். செய­ல­கத்தில் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளுக்கும் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வு­க­ளுக்குமிடையில் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த சந்­திப்பில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தரப்பிலிருந்து கார­சா­ர­மான கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.  

அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் முன்­னைய விசா­ர­ணை­களைப் போலல்­லாமல் விரி­வான முறையில் நம்­பிக்­கைக்குரிய வகையில் விசா­ர­ணைகளை நடத்தும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட போதி லும் அத்­த­கைய செயற்­பா­டு­களை அதி­கா­ரி­க­ளினால் முன்­னெ­டுக்க முடி­ய­வில்லை.

மாறாக முன்­னைய ஆணைக்­கு­ழுக்­க ளைப் போலல்­லாமல் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உண்­மையில் என்ன நடந்­தது, அவர்கள் என்­ன­வா­னார்கள் என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­களை நியா­ய­மா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் இந்த அலு­வ­லகம் நடத்தி ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு நீதி­யையும் நியா­யத்­தையும் இந்த அலு­வ­லகம் பெற்­றுத்­தரும் என்ற நம்­பிக்­கையை முதலில் ஏற்­ப­டுத்த வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு ஆளா­கி­யது.

இந்த நம்­பிக்­கை­யூட்டும் நட­வ­டிக்­கையை விழிப்­பு­ணர்வு செயற்­பாடு என்ற பெயரில் ஒரு பிர­சார நட­வ­டிக்­கை­யா­கவே அந்த அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரிகள் மாவட்­டந்­தோறும் மேற்­கொண்­டி­ருந்­தனர். ஆனால் அந்த நட­வ­டிக்­கைகள் வெற்­றி­பெ­று­வ­தற்குப் பதி­லாக அந்த அலு­வ­ல­கத்­துக்கு எதி­ரான எதிர்ப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­து­வ­தற்கே வழி வகுத்­தி­ருந்­தது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­ப­டு­கின்ற உண்­மைகள் வெளிப்­ப­டுத்­தப்­படமாட்டாது. அந்தத் தக­வல்கள் ஆட்­களைக் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ரான நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளுக்குப் பயன்­ப­டுத்தப்பட­மாட்­டாது. விசா­ர­ணை­களின் மூலம் காணாமல் ஆக்­கப்­பட்ட ஒருவர் கண்­ட­றி­யப்­பட்டால், அவர் இருக்­கின்ற இடமும் வெளிப்­ப­டுத்தப்பட­மாட்­டாது. ஆனால் காணாமல் போயுள்­ள­வர்­க­ளுக்கு மரணச் சான்­றி­த­ழுடன், இழப்­பீட்டுக் கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். - இதுவே காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டு­க­ளாக அமைந்­திருக்கும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் இத்­த­கைய செயற்­பா­டுகள் தங்­க­ளுக்குத் தேவையில்லை. தங்­க­ளுக்கு இழப்­பீட்டுக் கொடுப்­ப­ன­விலும் பார்க்க காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை யார் காணாமல் போகச் செய்­தார்கள் என்ற உண்மை நிலைமையைக் கண்­ட­றிந்து தெரி­விக்­க வேண்டும். அதற்குக் கார­ண­மா­ன­வர்கள், பொறுப்­பா­ன­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்தி, தங்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்­பதே தமது கோரிக்கை என்றே பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர். இதனால் ஐ.நா. பிரே­ர­ணைக்­க­மைய பொறுப்புக் கூறு­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் என்ற பொறி­முறை பாதிக்­கப்­பட்ட மக்­களின் கோரிக்­கையை நிறை­வேற்­றத்­தக்­க­தா­கவும் அவர்­க­ளுக்குப் பய­னற்­ற­தா­கவும் அமைந்­துள்­ளது.

இந்த நிலையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஐ.நா.வின் இலங்­கைக்­கான இணைப்­பாளர் ஹனா சிங்­க­ரிடம் தெரி­வித்­தி­ருப்­பது ஓர் அர்த்­த­மில்­லாத அர­சியல் ரீதி­யான கருத்­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

முக்­கி­யஸ்­தர்­களின் முக்­கி­ய­மான சந்­திப்பு

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று அரச தரப்பிலிருந்து முதன் முறை­யாக ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட கருத்தை சாதா­ர­ண­மா­ன­தாகக் கொள்ள முடி­யாது. ஏனெனில் இந்தக் கருத்து வெளி­யி­டப்­பட்ட சந்­தர்ப்­பமும், சந்­திப்பும் அதி முக்­கி­யத்­துவம் வாய்ந்­தவை.

இந்த நாட்டின் அதி­யுயர் அதி­கா­ர­முள்ள தலை­வ­ரா­கிய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கும் ஐக்­கிய நாடுகள் மன்­றத்தின் இலங்­கைக்­கான இணைப்­பா­ள­ருக்குமிடையில் நடை­பெற்ற உயர் மட்டச் சந்­திப்­பாகும். இதில் கலந்து கொண்­ட­வர்கள் இரு­வ­ருமே இரு முனை­க­ளிலும் நிறு­வன ரீதி­யிலும் பதவி வழி­யிலும் முக்­கி­ய­மா­ன­வர்கள்.

அதே­போன்று பேசப்­பட்ட விட­யமும் அதிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அது அனைத்­து­லக அளவில் மனித உரி­மைகள் மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­டைய ஒரு விட­ய­மாகும். இந்த விடயம் குறித்து நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் தெரி­விக்­கப்­பட்ட கருத்தை சாதா­ர­ண­மாகக் கொள்ள முடி­யாது. அத்­துடன் அரச தலைவர் என்ற ரீதியில் பொறுப்­பு­மிக்க நிலையிலிருந்தே கருத்து வெளி­யிட வேண்டும். வெளிப்­பட்­டி­ருக்க வேண்டும்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள் என்று அந்த விட­யத்­துடன் சம்­பந்­தமும் தொடர்பும் இல்­லாத ஒருவர் கூறு­கின்ற சாதா­ரண கருத்­தாக அதனை வெளி­யிட முடி­யாது. அதே­நேரம் அர­சியல் ரீதி­யான பிர­சாரம் உள்­ளிட்ட வேறு கார­ணங்­க­ளுக்­காக வெளி­யி­டப்­ப­டு­கின்ற கருத்தைப் போன்று இந்த விட­யத்தில் கருத்­து­ரைக்க முடி­யாது.

ஏனெனில் ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கு முன்னர் யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் அரச படை­களின் செயற்­பா­டு­க­ளுக்கு மூல­கர்த்தா என்ற நிலையில் மிகவும் பொறுப்­பான பத­வி­யொன்றை வகித்­தி­ருந்­தவர். அப்­போ­தைய பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக அவர் பொறுப்­பேற்றுச் செயற்­பட்­டி­ருந்தார்.

பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் என் றால் சாதா­ரண நிலையில் அவர் அந்தப் பத­வியில் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. மிகவும் அதி­கார பலத்­துடன் அதுவும் இரா­ணுவத் தள­ப­தியை மேவி யுத்தச் செயற்­பா­டு­களை நேர­டி­யாகக் கையாள்­கின்­ற­வ­ரா­கவும், யுத்­தத்தை வழி­ந­டத்­து­ப­வ­ரா­க­வுமே அவர் செயற்­பட்­டி­ருந்தார்.

தனது சகோ­த­ர­ரா­கிய நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்த ஜனா­தி­ப­தியின் வலது கர­மாக பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் என்ற பத­வியில் - அந்த அந்­தஸ்தில் அதீத உரி­மை­க­ளையும் உரித்­துக்­க­ளையும் கொண்டு செயற்­பட்­டி­ருந்தார். இதன் கார­ண­மா­கவே காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விவ­காரம் தொடர்பில் அவர் மீது பொறுப்­புக்கள் சுமத்­தப்­பட்டு குற்­றச்­சாட்­டுக்­க­ளும்­கூட முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

பொறுப்பு இரட்­டிப்­பா­னது

அர­சி­யல்­வாதி என்ற முன் அனு­ப­வமும் செயல்­வ­ழியும் இல்­லாமல் இத்­த­கைய பின்­பு­லத்தைக் கொண்டு ஆட்சி மாற்­றத்தின் மூலம் நேர­டி­யாக ஜனா­தி­ப­தி­யாகத் தேர்தல் மூல­மாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட்டு விட்­டார்கள் என்று நாட்டின் ஜனா­தி­பதி தெரி­விப்­பதை உண்மை என்று ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதே­வேளை அந்தக் கருத்தை அர­சி­யல்­வாதி ஒரு­வரின் கருத்து என்று சாதா­ர­ண­மாகக்கொண்டு கடந்து சென்­று­வி­டவும் முடி­யாது.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களில் கணி­ச­மா­ன­வர்கள் இறுதி யுத்­தத்­தின்­போது அர­சாங்­கத்தின் கோரிக்­கையை ஏற்று, தங்­க­ளுக்குப் பாது­காப்பும் பொது­மன்­னிப்பும் கிடைக்கும் என்ற உத்­த­ர­வாதத்தின் மீது நம்­பிக்கை வைத்து இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தார்கள். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது, அவர்கள் எங்கே வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்ற கேள்­விக்குப் பதி­ல­ளிக்க வேண்­டிய தட்­டிக்­க­ழிக்க முடி­யாத பொறுப்பு அர­சாங்­கத்­துக்குள்­ளது.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷவைப் பொறுத்­த­மட்டில் இது இரட்­டிப்புப் பொறு ப்­பா­னது. ஏற்­க­னவே யுத்­த­கா­லத்தில் காணாமல் போன­வர்கள் - குறிப்­பாக இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்­டிய கடப்­பாடு உள்­ளது. போர்க்­காலச் செயற்­பா­டு­களில் நேர­டி­யாகப் பங்­கு­கொண்ட இப்­போ­தைய ஜனா­தி­பதி என்ற வகையில் அந்தப் பொறுப்பும் கடப்­பாடும் மிகவும் கன­தி­யா­னது.

ஐ.நா. அதி­கா­ரி­யு­ட­னான சந்­திப்­பின்­போது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் ஜனா­தி­பதி தெரி­வித்த கருத்­துக்­களை ஜனா­தி­பதி செய­லகம் அறிக்கை மூல­மாக வெளி­யிட்­டுள்­ளது.

அதன்­படி, இந்த காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் உண்­மை­யி­லேயே கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள். அவர்­களில் அநே­க­மானோர் எல்.­ரீ­.ரீ­.ஈ.யி­னரால் வலிந்து ஆட்­சேர்ப்பு செய்­யப்­பட்­ட­வர்கள். காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்கள் இதனை உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றன. ஆயினும் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என தெரி­யாமல் அவர்­களை இந்தக் குடும்­பங்கள் காணாமல் போயுள்­ள­வர்கள் என கூறு­கின்­றார்கள். முறை­யான விசா­ர­ணை­களின் பின்னர் காணாமல் போயுள்­ள­வர்­க­ளுக்கு மரணச் சான்­றிதழ் வழங்­கவும், அதன் பின்னர் காணாமல் போயுள்­ள­வர்­களின் குடும்­பங்கள் வாழ்க்­கையைத் தொடர்ந்து நடத்­து­வ­தற்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விட­யத்­துக்­கான இந்தத் தீர்வு தங்­க­ளு­டைய அர­சியல் நிகழ்ச்சி நிரலைப் பாதித்­து­விடும் என்ற கார­ணத்­துக்­காக தமிழ் அர­சி­யல்­வா­திகள் இதனை நிரா­க­ரித்­துள்­ளார்கள் என்றும் ஜனா­தி­பதி இந்தச் சந்­திப்­பின்­போது குறிப்­பிட்­டுள்ளார்.  

தட்­டிக்­க­ழிக்க முற்­ப­டு­வது நல்­ல­தல்ல

ஆட்­களைக் காணா­ம­லாக்­கு­வது என்­பது சர்­வ­தேசக் குற்­றச்­செ­ய­லாகக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. சாதா­ரண நிலையில் சாதா­ர­ண­மா­ன­வர்கள் இந்தக் குற்றச் செயலைச் செய்ய முடி­யாது. இது பொது­வா­கவே நாடு­களில் பார­தூ­ர­மான குற்­றச்­செ­ய­லாகக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.

எனவே, பொறுப்­பான பத­வி­களிலுள்­ள­வர்­க­ளி­னாலும், பொறுப்­பு­மிக்க கட­மை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளி­னாலும் ஆட்கள் காணாமல் ஆக்­கப்­ப­டு­வது என்­பது இன்னும் மோச­மான குற்றச் செய­லாகக் கரு­தப்­படும். அந்த வகையில் போர்க்­கா­லத்தில் இடம்­பெ­று­கின்ற ஆட்­களைக் காணாமல் ஆக்­கப்­ப­டு­கின்ற குற்றச் செய­லா­னது போர்க்­குற்றச் செய­லா­கவே சர்­வ­தேச மட்­டத்தில் கரு­தப்­ப­டு­கின்­றது.

அத்­த­கைய ஒரு பார­தூ­ர­மான விவ­கா­ரத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் அனைவரும் கொல்­லப்­பட்­டு­விட்­டார்கள். அதற்கு விடு­த­லைப்­பு­லி­களே பொறுப்பு எனக்கூறி கைக­ழுவி விட முடி­யாது.

இந்த விடயத்தை அரசாங்கம் மிகுந்த பொறுப்போடு கையாள வேண்டும். காணா மல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற உண்மை நிலையை நியாயமான நம்பிக்கைக்கு உரிய வகையில் கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக போர்முடிவின்போது பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக் கள் பார்த்திருக்க,  இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும், சரணடைந் தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டியது அர சாங்கத்தின் கட்டாயக் கடமையாகும்.

அதற்குரிய விசாரணைகளை நடத்து வதற்கு அரசாங்கம் தாமதமின்றி நடவ டிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண் டும். யுத்தத்தை முன்னின்று நடத்தி, அதனை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களே இப்போது அதிகாரத்தில் இருக்கின்றார்கள். குறிப்பாக நிறைவேற்று அதிகார பலத்தைக் கொண்டவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜ­பக் ஷ திகழ்கின்றார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந் ததன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர் கள் பற்றிய விவகாரம் படிப்படியாக மேலெழுந்தபோது அதற்கு முடிவு காண ப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தப் பொறுப்பிலிருந்து அப்போதைய அரசாங் கமும் ஆட்சியாளர்களும் தவறி விட்டார்கள்.  அவர்கள் பதவியிழந்து மீண்டும் மக்க ளால் தெரிவு செய்யப்பட்டவர்களாக அதி காரத்துக்கு வந்துள்ள நிலையில் முன்னர் தவறவிடப்பட்ட விடயத்துக்கு நியாயமா னதும் நீதியான முறையிலும் தீர்வுகாண வேண்டும்.

அதனைத் தட்டிக்கழிக்க முற்படுவது நல்லதல்ல. ஏனெனில் போர்க்குற்றச் செய ல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்து எந்தவேளையிலும் பற்றி எரியக் கூடும். அத்தகைய நிலைமை என்பது அனைவருக்கும் பாரதூரமான பாதிப்புக் களை ஏற்படுத்துவதாகவே இருக்கும். எனவே நிலைமைகளின் தீவிரத் தன் மையை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை ஆறுதல்படுத்தவும் தங்கள் மீது சூழ்ந்துள்ள பழிபாவங்களைத் துடைத் தெறிவதற்காகவும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதே முக்கியம்.

- பி. மாணிக்கவாசகம்

.