வவுனியாவில் குப்பை மேட்டினை எதிர்த்து தொடரும் மக்கள் போராட்டம்

Published By: T Yuwaraj

22 Jan, 2020 | 02:16 PM
image

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி கோரி, பிரதேச இஸ்லாமிய மக்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குற்பட்ட குப்பைகள், வைத்தியசாலை கழிவுகள், பாவனையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு உழவியந்திரங்கள், லொறிகள் மூலம் கொண்டு வந்து பாதுகாப்பற்ற முறையில் வீசுவதுடன், தீ மூட்டுவதால் வெளியாகும் கருமையான புகையினால், பல்வேறு சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மழை காலங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை வவுனியா நகரிலிருந்து வாகனங்களில் கொண்டுவரும் கழிவுகளை உள்ளே, அனுமதிக்க மாட்டோம் என தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப்போவதாகவும் தெரிவித்தனர்.

கடந்தவருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய கைவிடப்பட்டிருந்தது. தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆர்பாட்டம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆர்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய கைவிடப்பட்டிருந்தது. தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆர்பாட்டம் இன்று மீண்டும் இடம்பெற்று வருகின்றது.

போராட்ட இடத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் தலைவர்,  பிரதேச செயலாளர், பொலிஸார் உட்பட பலரும் வருகை தந்து பிரச்சினையை சுமூகமாக்க முயன்றும் முடியாத நிலையில் தற்போதும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18