கிளிநொச்சி கோணாவில் விநாயகபுரம் கிருஸ்ணபுரம் ஆகிய கிராமங்களில் குற்றச்செல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிசாரால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேசத்திற்கு உட்பட்ட கோணாவில், காந்திகிராமம். புதியநகர், விநாயகபுரம், கிருஸ்ணபுரம், ஊற்றுப்புலம் அகிய பகுதிகளில் சட்டவிரோத கசிப்ப உற்பத்தி மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்துக்காணப்பட்டது.

அத்துடன் இதனால் பல்வேறுபட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் பொதுமக்களால் பல்வேறுபட்டக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் கிளிநொச்சிப் பொலிசார் இணைந்து பொதுமக்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் பொலிசார் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் குறித்த பிரதேசங்களில் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன என்றும் இதேபோன்று ஏiனைய பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்;படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த அடிப்படையில் நேற்ற (21-01-2020) கிருஸ்ணபுரம், விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் கிராம அலுவலர் பொது அமைப்பக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்