(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாடெங்குமுள்ள சகல குடும்பங்களுக்கும் சுத்தனமான குடி நீரை பெற்றுக்கொடுக்கவும் அதனை 2025ஆம்  ஆண்டுக்குள் பூர்த்தி செய்யவும் திட்டமிட்டிருக்கின்றோம் என  நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 நீர்வழங்கல் சேவையை நாடளாவிய ரீதியில் அமுலாக்குவதற்கு   இணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க  70 தொண்டர் இணைப்பு அதிகாரிகளுக்கு நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர்வழங்கல் வசதிகள் அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் சகல கிராமங்களுக்கும் குழாய் மூலமான சுத்தமான குடி நீரைப்  பெற்றுக்கொடுப்பது  பாரியதொரு செயற்பாடாகும்  இதற்கான பொதுத்திட்டமொன்றை நாம் வகுத்துவருகின்றோம். எமது நாட்டின் 52சத வீதமான மக்களுக்கு இதுவரை குழாய் மூலமான குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றது.

சில உலர்வலயப் பிரதேங்களில் குடி நீருக்குப் பாரிய தட்டுப்பாடு நிகழ்கின்றது. மழை இல்லாத காலங்களில் தூர இடங்களுக்கு வாகனங்கள் மூலம் சென்று பல சிரமங்களுக்கு மத்தியிலே குடி நீரை எடுத்து வருகின்றனர். 

முன்னைய காலங்களில் நீரை வழங்கினால் போதும் என்ற நிலையில் காணப்பட்டாலும் தற்போதையே  தேவையாக இருப்பது சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொடுப்பதாகும் .இது எமது இலக்காகும். வீடுகளில் சுக நலப் பாதுகாப்பு அமைந்திருப்பதும்  நீரின் மூலமாகும்.

அத்துடன் சுத்தமான குடி நீரை சுக நலப்பாதுகாப்புக்காக பயன்படுத்துவதும் துரதிஷ்டவசமானதாகும். கொழும்பு பகுதியில் சுத்தமான குடிநீரே சுக நலப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன் படுத்தப்படுகின்றது.

இதில் மாற்றம் கொண்டுவரப்பட்ட வேண்டும். குழாய் மூலம் நீரை வாங்குவதற்கு பாரிய செலவுகள் மேற்கொள்ளப்பட்டாலும் நுகர்வோரிடமிருந்து மிவவும் குறைவான தொகையே கட்டணமாக அரவிடப்படுகின்றது என்றார்.