நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி : எதிராக 145 வாக்குகள் : சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

Published By: Ponmalar

09 Jun, 2016 | 06:44 PM
image

நிதியமைச்சர் ரவி கருநாணாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணை தோல்வியடைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று 2.30 மணியளவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை  தொடர்பான விவாதம் இடம்பெற்ற நிலையில் 6 மணியளவில் வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு 6.30  மணியளவில் பிரேரணைத் தொடர்பான முடிவுகள் வெளியடப்பட்டன.

 பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் அளிக்கப்பட்டதோடு 28 பேர் மன்றுக்கு சமூகமளிக்கவில்லை.

இந்நிலையில் நிதியமைச்சருக்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இதனையடுத்து எதிர்க் கட்சியினர்  கூச்சலிட்டதால் சபை நடவடிக்கைகளை பத்து நிமிடத்துக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.   

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி. யின் ஏனைய உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த பிரேரணைத் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துக் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04