அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனான வெற்றியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணியினர் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 இருபதுக்கு - 20, 3 ஒருநாள் மற்றும் 2 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

இந்த போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியினர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஷிகர் தாவன் நியூஸிலாந்து செல்லவில்லை.

பெங்களூருவில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 ஆவது ஓவரில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது தரையில் விழுந்தார் தவான்.

இதனால் அவரின் தோள்பட்டை இணைப்பு பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் நியூஸிலாந்து அணியுடனான தொடரலிருந்து விலகியுள்ளார்.

தவானுக்கு பதிலாக தற்போது நியூசிலாந்தில் இந்திய ‘ஏ’ அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

New Zealand vs India T20I schedule

January 24 (Friday): 1st T20I at Eden Park, Auckland 

January 26 (Sunday): 2nd T20I at Eden Park, Auckland 

January 29 (Wednesday): 3rd T20I at Seddon Park, Hamilton 

January 31 (Friday): 4th T20I at Westpac Stadium, Wellington 

February 2 (Sunday): 5th T20I at Bay Oval, Mount Maunganui

New Zealand vs India ODI schedule

February 5 (Wednesday): 1st ODI at Seddon Park, Hamilton 

February 8 (Saturday): 2nd ODI at Eden Park, Auckland

February 11 (Tuesday): 3rd ODI at Bay Oval, Mount Maunganui 

New Zealand vs India Test schedule

February 21-25: 1st Test, Basin Reserve, Wellington (4:00 AM IST every day)

February 29-March 4: 2nd Test, Hagley Oval, Christchurch (4:00 AM IST every day)