சிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரை தொடர்ந்து இலங்கை அணி மேற்கிந்தியத்தீவுகளுடன் மேதவுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்று சர்வதேச ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத்தீவுகள் அணியானது இலங்கை வரவுள்ளது.

அதன்படி பெப்ரவரி 10 ஆம் திகதி மேற்கிந்தியத்தீவுகள் அணியானது இலங்கை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந் நிலையில் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒருநாள் தொடருக்கு முன்னதாக 17,20 ஆம் திகதிகளில் மேற்கிந்தியத்தீவுகள் அணி இலங்கை அணியிடன் இரண்டு ஒருநாள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது.

* முதல் ஒருநாள் போட்டி பெப்ரவரி 22 கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம்

* இரண்டாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 26 ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம்

* மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 01 கண்டி பல்லேகல மைதானம்

*  முதல் இருபதுக்கு - 20 போட்டி கண்டி பல்லேக மைதானம்

* இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டி கண்டி பல்லேக மைதானம்