பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் ஈடுபடுத்துவதற்காக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு நாட்டின் சகல மாவட்டங்களிலும் அமைந்துள்ள அரச காரியாலயங்களுக்கு இராணுவத்தினரை நியமிப்பதற்கான கால அவகாசத்தை இன்னும் ஒருமாதம் நீடிக்கவுள்ளதாக வர்த்தமானில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து நாட்டின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வர்த்தமானி அறிவிப்பு பின்வருமாறு: