(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கடந்த நவம்பர் மாதத்தில் மாத்­திரம் அர­சாங்­கத்தின் அமைச்­சுகள்,  திணைக்­க­ளங்கள்,ஆணைக்­கு­ழுக்கள், மாகாண சபை­க­ளுக்­காக  2170 கோடியே 89,75000ரூபா குறை நிரப்பு பிரே­ரணை மூலம்  ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

01-11-2019 முதல் 30-11-2019 வரைக்­கு­மான குறை­நி­ரப்பு பிரே­ர­ணை­யி­லேயே இந்­நிதி  ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.  

இதில் குறிப்பாக ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக்ஷ- முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின்  எரி­பொருள்,வாகனப் பொறித்­தொ­குதி,மற்றும் இயந்­தி­ரப்­ப­ரா­ம­ரிப்பு,தபால் தொடர்­பாடல்,மின்­சாரம்,மற்றும் நீர்  செல­வின அதி­க­ரிப்­பினை ஈடு செய்வதற்காக 33 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .