உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்ட உம்ரிபேகம் கஞ்ச் பகுதியில் விவசாயிகள் அடங்கிய குழுவொன்று தாங்கள் வயலுக்கு செல்ல, படகில் காக்ரா ஆற்றை கடக்க முயன்றுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில், படகில் மொத்தம் 25 பேர் இருந்திருந்தனர். அப்போது அந்த படகு ஒரு பாலத்தில் வேகமாக மோதி, கவிழ்ந்துள்ளது. இதனால், படகிலிருந்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். 

இதில் 14 பேரை பொலிஸார் மீட்டு, வைத்தியசாலையில் சேர்த்தனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார். எஞ்சிய 11 பேரின் நிலை என்ன  என்பது தெரியாத நிலையில், காணாமல் போனவர்களை சுழியோடிகள் தேடிவருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.