மேல் மாகாணத்தில் போக்குவரத்து குற்றச்சாட்டில் ஈடுபட்ட 750 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நடவடிக்கையின்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கு அமையவே, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுமார் 128 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பதுடன், அவர்களை பொலிஸார் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.