சீனாவின்  உஹான்  மாகாணத்தில் தாக்கிய கொரேனா வைரஸ் இருபது நாள்களுக்குள் தாய்லாந்து, ஜப்பான்,தென்கொரியா மற்றும் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியதால், உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன.

நோய் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளை  எச்சரித்துள்ளது.

இந்நிலையில்,கொரோனா வைரஸைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் இதோ,

கொரோனா வைரஸ்கள் 

சார்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த `கொரோனா வைரஸ்’ என்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது.

அந்தவகையில் நோய் அறிகுறிகள் 

சாதாரண சளி, குளிர் காய்ச்சல் இந்த நோயின் அறிகுறிகள். அதன்பின்னர் நிமோனியா, நுரையீரல் பாதிப்பு என அதன் தாக்கம் தீவிரமடையும். பின்னர் மரணம் சம்பவிக்கின்றது. 

கடந்த 20 நாட்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், சீனா நாட்டுக்கான பயணத்திற்கு பின்னர் மூச்செடுத்தல் தொடர்பில் சிக்கல் அறிகுறி தோன்றினால் மருத்துவ  உதவியை நாட வேண்டும் என  உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. 

கொரோனா வைரஸ் சிகிச்சை

குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை.

பெரும்பாலான நேரங்களில், அறிகுறிகள் தானாகவே நீங்கிவிடும்.

வலி அல்லது காய்ச்சலுக்கான மருந்துகளை பரிந்துரைப்பதன் மூலம் மருத்துவர்கள் அறிகுறிகளைப் போக்கலாம்.

அறையில் ஒரு ஈரப்பதமூட்டுதல் அல்லது வெந்நீர்க் குளியல் தொண்டை வலி மற்றும் இருமலுக்கு உதவும் என்று கூறுகிறது.

ஏராளமான திரவங்களை குடிக்கவும், ஓய்வெடுக்கவும், முடிந்தவரை தூங்கவும்.

அறிகுறிகள் ஒரு நிலையான குளிர்ச்சியை விட மோசமாக உணர்ந்தால், மருத்துவரைப் நாடவும்.

வைரஸ் பரவுவதை  தடுக்க  எடுக்க வேண்டிய  நடவடிக்கைகள் தொடர்பில் நம் நாட்டின் சுகாதார அமைச்சு  சில  அறிவுரைகள்

நல்ல  சுகாதார பழக்க  வழக்கங்களை  பின்பற்ற  வேண்டியது அவசியமானதாகும்  . 

தும்மல்  வரும்போது  கைக்குட்டையால்  முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும்.   

கைகளை சவர்காரமிட்டு கழுவிக்கொள்ள  வேண்டும்.

அடிக்கடி முகத்தையோ  மூக்கையோ  தொடாதிருத்தல் வேண்டும். 

சன நெருக்கடியான இடங்களில்  தேவையற்ற  முறையில்  சுற்றித்திரிதலை  நிறுத்திக்கொள்ளதல் அவசியமானதாகும்.

விசேடமாக  சிறுவர்கள்  ,  கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் முதியவர்கள்  அதிகம் நடமாடும்  இடங்களில் , நடமாடுதல் மற்றும் பயணங்களில் ஈடுபடுதலை குறைத்தால் போன்ற செயற்பாடுகளால் இந்த நோயின் பரவலை கட்டுப்படுத்தி கொள்ள  முடியும். 

சீனாவில்  பரவிவரும்   கொரேனா வைரஸ் தொற்றுக்கு  உள்ளான  பயணிகளை  இனம்  காணும் வகையில்  ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தும்  நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.