பம்பைமடு குப்பைமேடு விவகாரம் : தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

Published By: R. Kalaichelvan

22 Jan, 2020 | 11:33 AM
image

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி கோரி, பிரதேச இஸ்லாமிய மக்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குற்பட்ட குப்பைகள், வைத்தியசாலை கழிவுகள், பாவனையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு லாரிகள்,உழவியந்திரங்கள் மூலம் கொண்டு வந்து பாதுகாப்பற்ற முறையில் வீசுவதுடன், தீ மூட்டுவதால் வெளியாகும் கருமையான புகையினால், பல்வேறு சுவாச பிரச்சினைகள் மற்றும் மழை காலங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை வவுனியா நகரிலிருந்து வாகனங்களில் கொண்டுவரும் கழிவுகளை உள்ளே, அனுமதிக்க மாட்டோம் என தெரிவிக்கும் அவர்கள், தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப்போவதாகவும் தெரிவித்தனர்.

கடந்தவருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆர்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய கைவிடப்பட்டிருந்தது. தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆர்பாட்டம் இன்று மீண்டும்ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில்  பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37