வருடம் தொடங்கிய இதுவரையான காலப்பகுதியில் 3,000 க்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மிகக் குறைந்தளவானோரே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்திலேயே டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை டெங்கு ஒழிப்புப் பணியகத்தின் கள ஆய்வு நடவடிக்கைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.