கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

Published By: Digital Desk 4

21 Jan, 2020 | 10:53 PM
image

யாழ். பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கியது.

பொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்து வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த நவம்பரில் பணித்தது.

இலங்கை இராணுவத்தின் அழுத்தத்தின் பின்னணியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த பணிப்புரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமிக்கு வழங்கியது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அந்தக் காலப்பகுதியிலிருந்த பேரவையும் ஒப்புதல் வழங்கியது.

அத்துடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எவரும் நீதிமன்றங்களில் முன்னிலையாகி சட்டத்தரணியாகக் கடமையாற்ற முடியாது என்ற சுற்றறிக்கையையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த நவம்பரில் வெளியிட்டது.

இந்த நிலையில் பல்கலைக்கழங்களில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் சடத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவில் இணைப்பதற்காக தன்னை சட்டத்தரணியாக நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்ய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஆவணங்களை வழங்குமாறு மானியங்கள் ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் சட்டம் ஊடாக கலாநிதி குமாரவடிவேல் குருபரன் கோரியிருந்தார்.

அந்த ஆவணங்களில் 2019 ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மறுத்துவிட்டது. அந்தக் கடிதத்தை பகிரங்கப்படுத்தவேண்டாம் என்று இராணுவம் ஆணைக்குழுவுக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய அந்தக் கடிதத்தை வழங்க முடியாது என்று கலாநிதி கு.குருபரனுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பதிலளித்திருந்தது.

இதுதொடர்பில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு கலாநிதி கு.குருபரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

அதுதொடர்பில் இரு தரப்பையும் அழைத்து தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இன்று விசாரணை நடத்தியது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த கம்மம்பில தலைமையில் உறுப்பினர்கள் நீதிபதி ரோஹினி வல்கம, மூத்த சட்டத்தரணி கிஷாலி பின்ரோ ஜயவர்தன, மூத்த சட்டத்தரணி. எஸ்.ஜி.புஞ்சிஹேவா, கலாநிதி.செல்வி திருச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் செயலகத்தில் இன்று இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

“கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பகிரங்கப்படுத்த முடியாது என்ற வாசகம் இடம்பெறாத நிலையில் அதனை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மறுப்பது தகவல் அறியும் எனது உரிமையை மீறும் செயலாகும் என்று கலாநிதி குமாரவடிவேல் குருபரன் வாதிட்டார்.

கடிதத்தின் தன்மையை ஆராய்ந்த தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, அந்தக் கடிதத்தை மேன்முறையீட்டாளரான கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பணித்தது.

2019 ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், போதனைசார் அலுவலகராக உள்ள நிலையில் நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கும் அனுமதி உண்டா? அவர் இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றங்களில் முன்னிலையாகின்றார்” என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53