மட்டக்களப்பு செங்கலடி பிரதேச சபை உறுப்பினார் மற்றும் அவரின் நண்பன் ஆகிய இருவரும் சேர்ந்து தமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினர் ஒருவரை வீதியில் வழிமறித்து தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(21) பகல் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேச சபையின் சுதந்திரகட்சியின் உறுப்பினர், அவரின் நண்பனுடன் சேர்ந்து சம்பவதினமான இன்று பகல்  செங்கலடி செல்லம் தியட்டருக்கு அருகில் வீதி கடவையில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை வழிமறித்து அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிஓடியுள்ளனர்.

இதனையடுத்து இந்த தாக்குதலில் காயமடைந்த தமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரின் நண்பர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முகநூல் சம்பந்தமாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இத தொடர்பான மேலதிக விசாரணைகளை எறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்