ரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய  

Published By: R. Kalaichelvan

21 Jan, 2020 | 09:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.  இவருக்கு வெளியில் விரோதிகள்  எவரும் கிடையாது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளே இன்று விரோதிகள் அதிகரித்துள்ளார்கள் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள்  பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பினை 200 ஆக  அதிகரிக்க  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எம்மை பொறுத்தவரையில் இவருக்கு சர்வதேச ரீதியிலும்,    தனிப்பட்ட ரீதியிலும் விரோதிகள் எவரும் கிடையாது. சர்வதேசத்தின் நமன்மதிப்பினை பெற்றுள்ளார்.

இவ்வாறான நிலையில் அவர்  தனத பாதுகாப்பை பலப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.

இலங்கை அரசியலில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்  என முக்கிய பதவி வகித்த இவரது பாதுகாப்பு அரசாங்கததின் பொறுப்பாகும். இன்று ஐக்கியதேசிய கட்சியின் தலைமைத்துவ முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.

ஆகவே தனக்கு கட்சி தலைமையகமான சிறிகொதாவிற்குள் பாதுகாப்பு அவசியம் என்பதை கருத்திற் கொண்டு அவர்  பாதுகாப்பை பலப்படுத்துமாறு குறிப்பிட்டிருக்கலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய  குரல் பதிவு  விவகாரத்தை அரசியலாக்க முடியாது. இந்த விவகாரம் முழுமையாக  நீதித்துறையுடன் தொடர்புப்பட்டுள்ளது.

ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் முடியாது அதற்கான அவசியமும் கிடையாது. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04