(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை கணினி குற்­ற­வியல் சட்­டத்தின் படி இரு­வ­ருக்­கி­டையே நடக்கும் தொலை­ பேசி உரை­யா­டல்­களை பதிவு செய்து வைத்­தி­ருக்­கவோ வெளி­யி­டவோ முடி­யாது என்ற நிலையில் எனது குரல் என திரி­பு­ப­டுத்­தப்­பட்ட  குரல் பதி­வு­களை வெளி­யிட்ட ஊடக நிறு­வ­னங்கள் சில­வற்­றுக்கு எதி­ராக ஒரு பில்­லியன் ரூபா மான நஷ்­ட­ஈடு  வழக்கு தாக்கல் செய்­ய­வுள்ளேன். இப்­ப­டி­யான 100 ஒலிப்­ப­தி­வுகள் வெ ளியா­னாலும் நான் அஞ்­ச­மாட்டேன் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­ம­சந்­திர  சபையில் தெரி­வித்­ததார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற கடற்­றொழில் அமைச்சின் ஒழுங்­கு­வி­திகள் முன்­மொ­ழிகள் மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே      அவர் இவ்­வாறு  குறிப்­பிட்டார். 

 அவர் அதன்­போது மேலும் உரை­யாற்­று­கையில்  

எனது குரல்­ப­திவு என கூறி என்­மீ­தான மிக மோச­மா­னதும் கீழ்த்­த­ர­மா­ன­து­மான  வகையில் ஒரு சிலர் விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.  எல்­லோரும் ஒன்­றாக இணைந்து ஒரு பெண் மீது கல் வீசு­கின்­ற­தற்கு ஒப்­பா­ன­தாக இதனை கரு­து­கின்றேன். அது­மட்டும் அல்ல, மது­போ­தையில் வந்து வீட்டில் சண்­டை­யிடும் சிலர்   எனது கணவர் எனது கன்­னத்தில் அறைந்து  எனது பற்­களை உடைத்­தெ­றிந்து எனது முகமே விகா­ர­மாக உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். 

நான் எனது கண­வரை ஏமாற்­றி­ய­தாக சில கீழ்த்­த­ர­மான தொழில் செய்யும் பெண்கள் கூறு­கின்­றனர். நான் ரஞ்சன் ராம­நா­ய­க­வுடன் தவ­றான உறவு மேற்­கொண்டு வரு­வ­தாக பல ஆண்­க­ளுடன்  தொடர்பு வைத்­து­கொண்டு தவ­றான நடத்­தை­களை முன்­னெ­டுக்கும் சில பெண்கள் என்னை பார்த்து கூறு­கின்­றனர், இது  நகைப்­புக்­குள்­ளாக்­கு­கின்­றனர். 

இன்று இந்த சபையில் இருக்கும்  கறுத்த மனம் கொண்ட நபர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து  என்னை விமர்­சித்­துக்­கொண்டு அவர்கள் தூய்­மை­யா­ன­வர்கள் என கூறிக்­கொள்­கின்­றனர். அனை­வரும் ஒரு பெண்­ணுக்கு சூழ்ந்­தி­ருந்து கல்­லெ­றி­கின்­றனர். ஆனால் ஒன்றை மட்டும் நன்­றாக நினைவில் வைத்­துக்­கொள்­ளுங்கள்.  நீங்கள் என்­னதான் என்னை கீழ்த்­த­ர­மாக விமர்­சித்­தாலும், எனக்கு எதி­ராக கல்­லெ­றிந்­தாலும் கூட நான் மௌனிக்க மாட்டேன். 

நான் இறந்தால் மட்­டுமே எனது வாய் மூடப்­படும்.  என்­னைப்­பற்றி நூறு குரல் பதி­வுகள் வந்­தாலும் நான் அஞ்­சப்­போ­வ­தில்லை.  துமிந்த சில்வா போன்­ற­வர்கள் அதி­கா­ரத்தில் இருந்­த­கா­லத்தில் ராஜபக் ஷக்கள் அதி­கா­ரத்தில் இருந்த காலத்தில் அவர்­க­ளுக்கு எதி­ராக போரா­டிய எனக்கு, முது­கெ­லும்பு உள்ள பெண்­ணாக குரல் கொடுத்த எனக்கு இப்­போது மட்டும் கூனிக்­கு­றுகி நிற்­க­வேண்­டிய அவ­சியம் இல்லை. 

இன்று எனக்­கெ­தி­ராக ஏன் இந்த அவ­தூறு கருத்­துகள் எழுந்­துள்­ளன, நான் போதைப்­பொருள் விற்று வரு­ப­வளா? அல்­லது விபச்­சா­ர­வி­டுதி நடத்­து­கின்­றேனா? நான் எனது நண்­ப­னுடன் தொலை­பே­சியில் பேசிய விட­யத்தில்,  சம­கால நண்­ப­ருடன் தொலை­பே­சியில் உரை­யா­டி­யதை   மாற்­றி­ய­மைத்து குரல்­களை திரு­பு­ப­டுத்தி என் மீது சேறு பூசு­கின்­றனர். 

இந்த நாட்டில் மக்­க­ளுக்கு உண்ண  உண­வில்­லாத நிலை­யிலும் மக்கள் அதை­யெல்லாம் மறந்து எனது குரல்­ப­திவை கேட்டு  ரசித்­துக்­கொண்­டுள்­ளனர்.  இலங்கை கணனி குற்­ற­வியல் சட்­டத்தின் படி இரு­வ­ருக்­கி­டையே நடக்கும் தொலை­பேசி உரை­யா­டல்­களை பதிவு செய்து வைத்­தி­ருக்க முடி­யாது  என்­ப­துடன் அதனை வெளி­யி­டவும் முடி­யாது. இது தொடர்­பாக ஊடக நிறு­வ­னங்கள் சில­வற்­றுக்கு எதி­ராக நான் சி.ஐ.டியில் முறைப்­பாடு செய்­துள்ளேன். இது மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட குரல் பதி­வு­களே என்­ப­தனை என்னால் உறு­திப்­ப­டுத்த முடியும். ஆகவே  வெகு விரைவில் எனக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு எதி­ராக ஒரு பில்­லியன் ரூபாவை கோரி வழக்கு தாக்கல் செய்ய தீர்­மா­னித்­துள்ளேன்.  நான் இந்த போரில் வெற்றி பெறு­கின்­றேனா அல்­லது எனக்கு எதி­ராக செயற்­படும் போதைப்­பொருள் காரர்கள் வெற்­றி­பெ­று­கி­றார்­களா என பார்ப்போம். 

ரஞ்சன் என்­னுடன் மட்­டுமே பேச­வில்லை, இந்த பாரா­ளு­மன்­றத்தில் உள்ள 225 பேரு­டனும் அவர் பேசி­யுள்ளார். ஆனால் வெளியில் வரு­வது எனதும் சில பெண்­க­ளுடன் அவர் பேசிய குரல் பதி­வுகள் மட்­டு­மே­யாகும்.  இது சிறைச்­சாலை நாட­கத்தின் பாகம் இரண்டு என்­பதே உண்மை. இதன் மூலம்  துமிந்த சில்­வாவை நல்­ல­வ­ராக காட்டி அவரை குழந்தை என சித்­த­ரித்து எனது தந்­தையே குற்­ற­வாளி என காட்டி அவரை விடு­தலை செய்­துக்­கொள்­வ­தற்­கா­கவே இந்த நாடகம் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றது.  துமிந்த சில்­வாவை விடு­தலை செய்யும் போது அதற்கு எதி­ராக குர­லெ­ழுப்­பு­வது நான் என்ற கார­ணத்­தி­னா­லுயே எனது வாயை மூடு­வ­தற்கே இத்­தனை முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன . 

இப்­போது என்னை ரஞ்சன் ராம­நா­யக்­க­வுடன் தொடர்­பு­ப­டுத்தி பேசு­வதை போன்று  ஆரம்­பத்தில் நாமல் ராஜபக் ஷவு­டனும் என்னை தொடர்­பு­ப­டுத்தி பேசி­னார்கள். இந்த சபையில் உள்ள பல ஆண்­க­ளுடன் என்னை தொடர்­பு­ப­டுதை பேசி­னார்கள். ஆனால் நான் ஒரு­போதும் மனம் தள­ர­வில்லை. நாம­லிடம் நீங்­களே கேளுங்கள் எனக்கும் அவ­ருக்கும் தொடர்பு இருந்­ததா என்­பது தெரியும். ஆனால் நாமலின் காத­லி­க­ளுக்கு நான் உதவி செய்­துள்ளேன். இவை நண்­ப­ராக இருந்த காலங்­களில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள்.  எனக்கு ஆண்­மை­மிக்க கணவர் உள்ளார். அவரை தவிர எவ­ரு­டனும் நான் தொடர்பை வைத்­துக்­கொள்­ள­வில்லை. 

உங்­களை நினைத்தால் வெட்­க­மாக உள்­ளது. உங்­களை போன்ற கீழ்த்­த­ர­மான நபர்­களை வைத்­துக்­கொண்டு எந்த நியா­யங்­க­ளையும் பெற முடி­யாது. துமிந்த சில்வா எப்­ப­டிப்­பட்­டவர் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். என்­னி­டமே நீங்கள் இதெல்லாம் கூறி­னீர்கள். எனது தந்­தையின்  மரணம் எவ்­வாறு இடம்­பெற்­றது என்­பது உங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். ஆனால் உண்­மை­களை தெரிந்து வாய்­மூ­டிக்­கொண்டு கூனிக்­கு­றுகி நிற்­கின்­றீர்கள்.   உங்­களின் குற்­றங்கள் அனைத்­துமே ஒரு­வ­ரிடம் உள்­ளன. ஆகவே இன்று உண்­மையில் அச்சம் கொள்­ள­வேண்­டி­யது எதிர்க்­கட்­சியில் இருக்கும் நாங்கள் அல்ல, அர­சாங்­கத்தில் இருக்கும் நீங்­களே அவரைக் கண்டு அஞ்ச வேண்டும். 

உங்­களின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிடம் சென்று ஒன்றைக் கூறுங்கள். நீண்­ட­காலம் செல்ல முன்னர் மஹிந்த ராஜபக் ஷவின் கழுத்தை பிடித்து ஆட்டும் அதி­காரம் குறித்த நப­ருக்கு கிடைக்கும். இப்­போதும் அது நடக்­கின்­றது என்றே நினைக்­கின்றேன். அதனால் தான் துமிந்த சில்­வாவை சிறைக்கு அனுப்­பிய அனை­வ­ரையும் தூக்கில் தொங்­க­விட வேண்டும் என மஹிந்த கூறு­கின்றார்.  இந்த நாடகம் அனைத்­துமே துமிந்த சில்­வாவை விடு­விக்­கவே இடம்­பெ­று­கின்­றன. அப்­போது இதனை எதிர்க்க நான் மட்­டுமே இருக்கின்ற காரணத்தினால் எனது வாயை மூடவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. 

ஆனால் இதற்கெல்லாம் அஞ்சும் நபர் நான் அல்ல. நான் ஆரம்பத்தில் இருந்தே போதைப்பொருள்காரர்களுடன் முட்டி  மோதிக்கொண்டுள்ளேன். கொலைகாரர் மற்றும்  ஜனாதிபதிகளுடன் மோதிக்கொண்டுள்ளேன். அப்படிப்பட்ட எனக்கு குரல்பதிவு ஒன்றும் செய்யாது. 

இன்று சபையில் இருந்து போதைப்பொருள் காரர்களுக்கு வக்காலத்து வாங்கும் நபர்கள் என்னை விமர்சிக்க முன்னர் உங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்து இவற்றையெல்லாம் கூறுங்கள். பிரபலத்துக்காக உங்களின் தன்மானத்தை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள்  என்றார்.