வவுனியா பம்பைமடுப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ பரம்பல் குடிமனையை நோக்கி நகர்ந்த நிலையில் நகரசபை தீயணைப்பு படையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் நகரசபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றாங்களின் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் இருந்த குப்பை மேட்டுக்கு இனந்தெரியாத நபர்கள் நேற்று மாலை (20.01) தீ வைத்திருந்தனர். 

குறித்த தீயானது குப்பை மேட்டில் எரிந்து படிப்படியாக நகர்ந்து காட்டுக்குள் சென்றது. இதனால் சாளம்பைக்குளம் புதிய குடியேற்ற பகுதியை நோக்கி தீ இன்று பிற்பகல் (21.01) பரவிச் சென்ற நிலையில் வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

விரைந்து செயற்பட்ட வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயணைப்பு வாகனத்தின் மூலம் தண்ணீர் பாய்ச்சி தீ பரம்பலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இதனால் பாரிய அனத்தம் தவிர்க்கப்பட்டது.