(செ.தேன்மொழி)

மருதானை பகுதி ஓடை ஒன்றிற்கருகில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

மருதானை - ஒராபிபாஷா மாவத்தை பகுதியில் ஓடை ஒன்றுக்கருகில் இன்று பொலிஸாருக்கு கிடைக்கப்  பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பழைமையான கைக்குண்டு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் , இதனை யார் இந்த பகுதியில் விட்டுச் சென்றிருப்பார் என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. 

இந்நிலையில் மருதானை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.