கதிர்காமம் பகுதியில் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ மற்றும் புகை மண்டலம் காரணமாக அப்பகுதியில் இருந்த தெடகமூவ பாடசாலை மற்றும் இரண்டு முன் பள்ளி பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த சம்பவம் இச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
ஊவா மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலிற்கு அமைய மாணவர்களின் பாதுகர்பை கருத்தில் கொண்டு பாடசாலைகளை முடியதாக பொலிசார் தெரிவித்தனர். குப்பை மலையின் புகை காரணமாக அங்கு பரிசோதனைக்காக சென்ற அதிகாரிகளும் மயக்கமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக கொட்டப்பட்டிருந்த குப்பை மலையில் நேற்று இரவு சிலரால் மூட்டப்பட்ட தீயினால் இன்று காலையில் அப் பிரதேசத்தில் அதிகளவிலான புகை மண்டலம் சூழ்ந்ததுடன் துர்நாற்றமும் வீசியுள்ளது.
இதனை தொடர்ந்து கதிர்காம பிரதேச சுகாதார அலுவலகம், தனமல்வில வலயக் கல்வி பணிப்பாளர் புத்திக கருணாரத்னவுக்கு ஆகியோருக்கு தகவல் அளித்ததையடுத்து அவர் பாடசாலைகளை மூடுமாறு அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM