இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப், உத்தரபிரதேஸ் மற்றும் ஹரியானாவில் பயிர் செய்கை மேற்கொள்ள வயல் நிலங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டுக்காக 167 விவசாயிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வயல் நிலங்களை எரிப்பதற்கான தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 104 104 அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வயல் நிலங்களுக்கு தீ வைத்து எரிக்கும் செயற்பாடானது டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு பெரும் பங்களிப்பை செய்வதாகவும் இன்றைய தினம் உத்தரபிரதேஸfd அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் இவ்வாறு வயல் நிலங்களை எரித்தது தொடர்பான 4,230 சம்பவங்களும், 2018 ஆம் ஆண்டில் 6,623 சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

அத்துடன் இதனால் இந்திய நாணய மதிப்பில் 97,7,800 ரூபா ($1,37,362) அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வயல் நிலங்களுக்கு தீ வைக்கும் செயற்பாட்டுக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தடை விதித்தை தொடர்ந்து, தீ வைப்பு சம்பவங்கள் 2019 ஆம் ஆண்டில் சுமார் 36 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.