உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் இடம்பெற்ற  முதல்கட்ட விசாரணைகளின் முடிவை வெளியிட்டுள்ள ஈரான் விமானத்தை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்பட்டன என தெரிவித்துள்ளது.

உக்ரைன் விமானத்தை நோக்கி இரு டோர் எம் 1 ஏவுகணைகள் செலுத்தப்பட்டதை விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என இணையத்தில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த ஏவுகணைகளின் தாக்கம் உட்பட ஏனைய விடயஙகள் குறித்து விசாரணையாளர்கள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களையும் குரூஸ் ஏவுகணைகளையும் இலக்குவைப்பதற்காக சோவியத்யூனியன் காலத்தில் உருவாக்கப்பட்டவை டோர் ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது.