திருகோணமலை துறைமுகத்தின தற்போதைய நிலை தனக்கு வருத்தமளிப்பதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ , துறைமுகத்தின் தற்போதைய நிலை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.  

அண்மையில் திருகோணமலை துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே அவர் இக்கருத்தை வெளியிட்டார். 

திருகோணமலை துறைமுகத்தின் மூலம் புதிய வியாபாரங்களை ஈர்க்கவும் அதனுடாக இலாபமீட்டும் துறைமுகமாக மாற்றவும் அதிகளவிலான அபிவிருத்தி செயற்பாடுகளை இவ்வரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம். 

பணிப்பாளர் குழுவின் தீர்மானத்திற்கிணங்க தனியார் துறையிலுள்ள திறமையான அதிகாரிகளைக் கொண்டு அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டமொன்றை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகியுள்ளது. புதிய செயற்றிட்டங்கள், புதிய நாடு, அபிவிருத்தியடைந்த நாடு, கண்கவர் நாடு ஆகிய செயற்பாடுகளில் துறைமுகத்தின் பங்களிப்பு தொடர்பாக தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளோம். ஆனால் திருகோணமலை துறைமுகத்தின தற்போதைய நிலை தனக்கு வருத்தமளிக்கின்றது. 

மேலும், எண்ணெய் தாங்கிகளிலுள்ள இரும்புகள் ஒருசிலரால் வெட்டப்படுவதாக எனக்கு அறியக்கிடைத்தது. இவ்வாறான  தேசிய மோசடிகளை அனுமதிக்க முடியாது. 2500 ஹெக்டெயார் மொத்த நிலப்பரப்பில் தற்போது 1200 ஹெக்டெயார் நிலப்பரப்பே எஞ்சியுள்ளது. எனவே, இது தொடர்பாக உரிய தீர்மானங்கள் மேற்கொண்டு இக்காலப்பகுதியில் துறைமுகத்தை பாரியளவில் அபிவிருத்தி செய்ய ஒன்றிணைந்து செயற்படுவதே தனது முழுமையான நம்பிக்கையாகும். 

1978 ஆம் ஆண்டு இவ்வனைத்து காணிகளும் இலங்கை துறைதுக அதிகாரசபை வசம் காணப்பட்டது. இதன்படி காணிகளின் ஆரம்ப உரிமையாளரிடம் தமது காணிகளிற்கான காணி உறுதிப்பத்திரம் காணப்பட்ட போதும் சிலரிடம் உறுதிப்பத்திரம் இல்லையென தகவல்களில் தெரிய வந்தது. 

எனவே, துறைமுகத்திற்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அதன் கீழ் திருகோணமலை பொலிஸ் நிலையத்திலும் கொழும்பிலுள்ள நீதிமன்றத்திலும் 300இற்கும் மேற்பட்ட காணி தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இப் பிரச்சினையைத் தீர்க்க முழு காணியையும் மீண்டும் அளவிடை செய்து அக்காணிகளை துறைமுக அதிகார சபை பெற்றுக்கொள்வதற்கு  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அவர் இதன்போது அறிவுரை வழங்கினார்.