வடக்கு நைஜீரியா, கட்சினா மாநிலத்தின் மாஷி கவுன்சில் பகுதியில்  ஏற்பட்ட வாகன  விபத்தில் 17 பேர்  உயிரிழந்துள்ளதோடு,  14 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

குறித்த சம்பவம் உள்ள யர்டுடு கிராமத்தில் ஏற்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை இரவு வேளை மாடுகள் மற்றும் பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று யர்டுடு கிராமத்தின் மை அதுவா-ஷர்கல்லேவ பகுதியிலேயே  விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், சாரதி வாகனத்தை அதிவேகமாக செலுத்தியமையால் வாகனத்தின் ஒரு பகுதி தனியாக பிரிந்து பாலம் ஒன்றின் மீது குடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.  

குறித்த விபத்தில் வாகனத்தில்  பயணித்த  17 பேர் மற்றும் மாடுகள் பலவும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  அந்நாட்டு பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.