கொஸ்கம சாலாவ இராணுவமுகாம் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பில்விசாரணைகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காகநான்கு தரப்புகளால்விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விரைவில் உண்மைகளை கண்டறிய முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

வெடிப்பின்போது ஏற்பட்ட சேதவிபரங்களை கண்டறிய விசேட இராணுவ குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார். 

கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் எவ்வாறான நிலையில் உள்ளது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.