போலி நாணயத்தாள்களுடன் முதியவர் ஒருவர் கைது

By J.G.Stephan

21 Jan, 2020 | 02:19 PM
image

(செ.தேன்மொழி)

புல்மோட்டை பகுதியில் 13 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை - மக்கள் வங்கிக்கிளையில் நேற்று திங்கட்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சந்தேக நபர் வங்கியின் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த ஊழியரிடம் 5000 ரூபாய் பெறுமதியான சில நாணயத்தாள்களை கொடுத்து சில்லரையாக மாற்றித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது சந்தேகமடைந்த பாதுகாப்பு ஊழியர் இந்த விடயத்தை வங்கி முகாமையாளரிடம் தெரிவித்ததை அடுத்தே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 5000 ரூபாய் நாணயத்தாள்கள் 13 மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12