அர­சியல் ரீதி­யாக மக்கள் தமது பிர­தி­நி­தி­க­ளாக அர­சியல் நிர்­வாக அமைப்­பு­க­ளான பாரா­ளு­மன்றம், மாகா­ண­ச­பைகள், மாந­கர, நகர, பிர­தேச சபை­க­ளுக்குத் தகு­தி­வாய்ந்­த­வர்கள், செயற்­றி­ற­மை­யுள்­ள­வர்கள் என்று நம்­பிக்­கை­யுடன் தெரிவு செய்­ப­வர்கள் அவற்றின் உறுப்­பி­னர்­க­ளா­க­வி­ருந்து குறிப்­பிட்ட சில ஆண்­டுகள் செய­லாற்­ற­வேண்டும். அதுவே எதிர்­பார்ப்­பாகும். அது முறை­யாக அமைந்­துள்­ளதா, நமது பிர­தி­நி­திகள் நமது எதிர்­பார்ப்­புக்­க­மைய மக்கள் பணி­யாற்­று­கின்­ற­னரா என்­பதை வாக்­க­ளித்து தெரிவு செய்த மக்கள் ஆரா­யா­ம­லி­ருப்­பதால் சமூ­கப்­பின்­ன­டை­வுகள் பல தினமும் நிகழ்­கின்­றன.

சமூகம் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய பல அடிப்­படைத் தேவை­களைப் பெற்றுக் கொடுப்­பதில் அக்­க­றை­யுடன் செயற்­பட ­வேண்­டிய நமது மக்கள் பிர­தி­நி­திகள் அவை பற்­றிய அக்­க­றை­யின்றி, அலட்­சி­ய­மாகச் செயற்­பட்டு வரு­வ­தையும், தம்­மி­டையே மோதி தரந்­தாழ்ந்த செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­வ­தையும் சமூக அக்­க­றையும், பொறுப்பும் கொண்ட எம்மால் சகித்­துக்­கொள்ள முடி­யா­துள்­ளது. தமிழன் தலை­விதி இதுவா என்று எண்ணத் தோன்­று­கின்­றது.

நடை­மு­றையில் காணப்­ப­டு­பவை எம்மை ஏமாற்­ற­ம­டையச் செய்­ப­வை­யா­கவேயுள்­ளன. உண்­மையை மறைக்­க­மு­டி­யாது. வெளிப்­ப­டுத்­தி­யே­யாக வேண்டும். இன்னும் எவ்­வ­ளவு காலத்­திற்­குத்தான் உரி­மை­யி­ழந்த சமூ­க­மாக நாம் இந்­நாட்டில் வாழ்­வது? நமது உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­கின்­றன. பிடுங்­கப்­ப­டு­கின்­றன. தடுக்­கப்­ப­டு­கின்­றன. தட்­டிப்­ப­றிக்­கப்­ப­டு­கின்­றன. என்று மேடை­களில் முழங்கும், அறிக்­கைமேல் அறிக்கை விடும் நமது மக்கள் பிர­தி­நி­திகள் அதற்கு அப்பால் எதுவும் செய்­வ­தில்லை. முழக்­கங்­களும் அறிக்­கை­களும் மட்­டுமே அர­சியல் என்று தாமும் நம்பி மக்­க­ளையும் நம்ப வைக்­கின்­றனர்.

முத­லிலே அர­சி­ய­ல­ரங்­கிலே புகுந்து மக்கள் சேவை­யாற்­ற­வென்று புறப்­பட்டு அரங்­கு­க­ளிலே ஆட­வந்­துள்ள ஒவ்­வொரு அர­சி­யல்­வா­தியும் புரிந்­து­கொள்ள வேண்­டிய பல விட­யங்கள் உள்­ளன. அவை அர­சி­யல்­வா­திகள் நலன் சார்ந்­தவை அல்ல. பொது­மக்கள் நலன் சார்ந்­த­வை­யாகும். சுய­நிர்­ணய உரிமை, தன்­னாட்சி யென்­றெல்லாம் கூப்­பாடு போட்டு தமிழ் மக்­களை வசி­யப்­ப­டுத்தி வாக்கு வேட்­டை­யா­டு­வது அர­சி­யலா? மேற்­கு­றித்­த­வற்றில் உண்­மை­யான அக்­கறை, நம்­பிக்கை நம் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் உள்­ளதா? நிச்­ச­ய­மாக இல்லை என்ற உண்மை ஆராய்ந்தால் வெளிப்­படும்.

தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டிய பல அடிப்­படைத் தேவைகள் உள்­ளன. அவற்றைக் கூறியே கடந்த காலங்­களில் தொடர்ந்தும் மக்­க­ளிடம் வாக்குக் கேட்கும் கலா­சாரம் காணப்­ப­டு­கின்­றது. பத­வி­களைப் பெற்­றபின் அடுத்த தேர்தல் வரும்­வரை பிரச்­சி­னைகள் பற்­றிய சிந்­தனை ஒத்­தி­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இவை நமது சமூகப் பின்­ன­டை­வுக்கு நாம் விரித்­துள்ள வலைகள். தமிழ் அர­சி­யல்­வா­திகள் தம் மத்­தி­யிலே மோதிக்­கொள்­வ­துதான் தமிழர் அர­சி­ய­லா­யுள்­ளது.

அதுவும் ஒரே அணியில் மக்­க­ளிடம் வாக்­குப்­பிச்சை கேட்டு கையேந்தி அதி­காரம் பெற்­ற­வர்கள் மக்­களை மறந்து ஒரு­வ­ரை­யொ­ருவர் காலை­வா­ரிக்­கொள்ள முயல்­கின்­றனர். தமிழர் நலன் தேவைகள் எப்­படிப் போனா­லென்ன. நாம் பதவி சுகத்தை அனு­ப­விப்போம் என்ற மன­நிலை நில­வு­கின்­றது. பத­வி­யொன்று பறிக்­கப்­பட்­டது பற்றி நீதி கேட்டு படி­யேறும் அளவு பதவி மேல் பாசம்­கொண்ட சமூ­க­மாக இன்று நாம் உள்ளோம். சில ஆண்­டுகள் அனு­ப­விக்கும் பதவி மேல் பற்றுக்கொண்ட நம்­ம­வர்கள். தமிழ் மக்கள் வாழ்க்கை முழு­வதும் அனு­ப­விக்க வேண்­டிய அடிப்­படை உரி­மை­களைப் பெற்­றுக்­கொ­டுக்க நீதி கேட்டுப் படி­யேறத் தயங்­கு­வதேன்?

இந்­நாட்டின் குடி­மக்­க­ளான தமிழ் மக்கள் உரி­மை­யுடன் வாழப் பல தடை­க­ளுள்­ளன. அத்­த­டை­களைத் தகர்த்­தெ­றிய நீதியின் துணையை நாட நமது சட்டம் தெரிந்த மக்கள் பிர­தி­நி­திகள் தயங்­கு­வதேன்? தமிழ் மக்கள் தொடர்ந்து அனு­ப­வித்து வரும் பின்­ன­டை­வுகள் மேலும் தொடர்ந்தால் மட்­டுமே அவற்றைக் கூறி, பெற்றுக் கொடுப்­போ­மென்று தேர்தல் காலங்­களில் வாக்­கு­று­தி­ய­ளித்து மக்­களை ஏமாற்­றலாம் என்ற எண்­ணத்­திலா? உண்­மையைச் சொல்­லுங்கள் என்று மக்கள் கேட்­கின்­றார்கள்.

இந்­நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு மூல­மாக அமைந்­தது மொழிப்­பி­ரச்­சினை. தனிச் சிங்­களச் சட்டம் நிறை­வேற்றி தமி­ழ­ரது மொழி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டது. அதன் மூலம் தமி­ழரின் பல உரி­மைகள் இழக்­கப்­பட்­டன. இருப்­பினும் 1956 இல் பறிக்­கப்­பட்ட தமிழ் மொழியின் உரிமை 1987 மற்றும் 1988 ஆம் ஆண்­டு­களில் இந்­தி­யாவின் அழுத்­தத்தால் வழங்­கப்­பட்­டது. தமிழ் மொழியின் உரிமை நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் உட்­ப­டுத்­தப்­ப­டு­வதில் நமது தமிழ் அர­சியல் பிர­தி­நி­தி­களின் பங்­க­ளிப்பு எதுவும் இல்­லை­யென்­பது மறைக்­க­மு­டி­யாத உண்மை.

வெளி­நா­டொன்றின் அழுத்­தத்தால் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட தமி­ழரின் மொழி­யு­ரிமை உரி­ய­படி அனு­ப­விக்க முடி­யா­ம­லுள்ள நிலையில் அதை­யா­வது செயற்­ப­டுத்தத் தூண்டும் எந்­த­வொரு முயற்­சி­யையும் நமது தமிழ் அர­சியல் பிர­தி­நி­திகள் எடுக்கவில்லை. மொழி­யு­ரிமை இன்றும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றது, மறுக்­கப்­படு­கின்­றது. குறித்த மொழி­யு­ரி­மையைத் தமிழ் மக்கள் அனு­ப­விக்க இன்­று­வரை நீதி கேட்டு குர­லெ­ழுப்ப நம்­ம­வர்கள் தயங்­கு­வதேன்? சட்­டத்தால் வழங்­கப்­பட்­டுள்ள உரி­மையைப் பெற சட்டரீதி­யான நட­வ­டிக்கை மேற்­கொள்ள வழி­யி­ருந்­த­போதும் அது­பற்றி அக்­கறை செலுத்­தா­தி­ருப்­பது ஏன்?

மாற்­றுக்­கொள்­கைக்­கான நிலையம் இது­வரை நானூற்­றுக்கும் மேற்­பட்ட தமிழ்­மொ­ழியின் உரி­மைக்­கான வழக்­கு­களை நீதி­மன்­றங்­களில் தொடுத்­துள்­ள­போது நமது தமிழ் அர­சி­யல்­வா­தி­களோ, அர­சி­ய­ல­மைப்­பு­களோ இன்­று­வரை மெள­ன­மாக ஒதுங்­கி­யி­ருப்­பதேன்? குறித்த நிலை­யத்தின் லயனல் குருகே என்­ப­வரின் மகன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்­பின்­படி தேசிய அடை­யாள அட்­டையில் மும்­மொ­ழி­களும் குறிப்­பாக தமி­ழிலும், சிங்­க­ளத்­திலும் பதி­வுகள் இடம்­பெற வேண்­டு­மென்று தீர்ப்பு கிடைத்­த­மையை சட்டம் தெரிந்த அர­சியல் பிர­தி­நி­திகள் அறி­யா­துள்­ள­னரா? தமிழ் மொழிக்கு நாட்டில் சட்­ட­ரீ­தி­யாக வழங்­கப்­பட்­டுள்ள உரி­மையை உறு­திப்­ப­டுத்த தமிழ் அர­சியல் பிர­தி­நி­திகள் தயங்­கு­வதேன்?

அடுத்­தது கல்வி. நாட்டின் தேசிய கல்­விக்­க­மைய சமத்­துவக் கல்வி, உரிய உய­ரிய கல்வி என்று பல உயர் கோட்­பா­டுகள் உள்­ளன. ஆனால், தமிழ்மொழி மூல­மான கல்­வியில் சமத்­து­வத்தைக் காண­மு­டி­ய­வில்லை. இலங்­கையில் தமிழர் வர­லாறு மறைக்­கப்­பட்ட கல்­வியே பாட­சா­லை­களில் வர­லாற்றுப் பாட­மாகக் கற்­பிக்­கப்­படுகின்­றது. யாழ்ப்­பாண இராச்­சியம், வன்னித் தமிழ் அரசு, மண்­முனை தமிழ் அரசு பற்­றிய வர­லாறு அற்ற நிலையில், புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலையில் திட்­ட­மிட்ட முறையில் தமிழர் வர­லாறு புறக்­க­ணிக்­கப்­பட்டு, மறைக்­கப்­பட்ட நிலையில் வர­லாற்றுக் கல்­வி­யுள்­ளது. இது தொடர்­பாக கவனம் செலுத்தும் அறிவு நமது அர­சியல் பிர­தி­நி­தி­க­ளுக்­கில்­லையா?

இந்­துக்­களின் ஒப்­பு­த­லின்றி பதி­யுதீன் மகமூத் என்ற கல்­வி­ய­மைச்சர் காலத்தில் கலா­நிதி பிரே­ம­தாச உட­கம என்ற அமைச்சின் செய­லா­ளரின் திட்­டத்­தின்­படி இந்து சமயம் என்ற பாடப்­பெயர் சைவ­சமயம் என்று மாற்­றப்­பட்­டது. வேறு சம­யத்­தவர் இவ்­வா­றான மாற்­றத்தை ஏற்­பார்­களா? நமது தமிழ்ப் பிர­தி­நி­திகள் இது­பற்றி சிந்­தித்­த­துண்டா?

காணி­யு­ரி­மை­யுள்ள பாரம்­ப­ரிய சொந்த மண்­ணி­லி­ருந்து வெளி­யே­றியும், வெளி­யேற்­றப்­பட்டும் அக­தி­க­ளாக, அனா­தை­க­ளாகப் பல்­லா­யிரம் தமிழ் மக்கள் வாழ்­வு­ரி­மைக்­காகப் போரா­டி­வரும் நிலையில் அவர்­க­ளது காணி­களைப் பெற்றுக்கொடுக்க சட்­டத்தின் துணையை நாட எதுவும் செய்­யப்­பட்­டுள்­ளதா? காணாமற் போனோர் பிரச்­சினை, விசா­ர­ணை­யின்றி சிறை­யி­ல­டைக்கப்­பட்­டி­ருப்போர் பிரச்­சினை என்று பலவும் உள்­ளன. இவற்­றுக்கு நியாயம் கிடைக்க சட்­டத்தில் வழி­யில்­லையா?

போதைப்­பொருள் பாவ­னையின் மூலம் சமூகச் சீர­ழிவு நடை­பெ­று­கின்­றது. பொரு­ளா­தார வள­மின்றி மக்கள் அவ­திப்­ப­டு­கின்­றனர். தொழில் வாய்ப்­புகள் பறிக்­கப்­ப­டு­கின்­றன. ஒழுக்கச் சீர்­கே­டுகள் அதி­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஒட்­டு­மொத்­த­மாக சமூகம் பின்­ன­டை­வுக்குத் தள்­ளப்­பட்டு வரு­கின்­றது. நிம்­ம­தி­யாக வீடு­களில் உறங்­க­ மு­டி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு மக்கள் அவ­திப்­படும் நிலையில் அவை பற்றி அக்­கறை செலுத்­தப்­ப­டாது அதி­கா­ரப்­போட்­டியில் ஈடு­பட்டு சமூகப் பெறு­ம­தியை தர­மி­றக்கும் செயற்­பா­டு­களே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மாவட்ட சபைகள் வழங்­கு­வ­தற்கே எதிர்ப்­பா­ன­வர்கள் இந்­திய அழுத்­தத்தால் மாகாண சபை­களை வழங்கும் நிலை ஏற்­பட்­டது. அது போதாது அதற்கும் மேல் அதி­காரம் வேண்டும் என்று கூறப்­படும் நிலையில், மாகாண ஆளு­நரின் அதி­காரம் குறைக்­கப்­பட்டு மாகாண முத­ல­மைச்­சரின் அதி­காரம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும் என்று கூறப்­படும் நிலையில் மாகாண முத­ல­மைச்­ச­ரை­விட மாகாண ஆளு­ந­ருக்கே சட்­டப்­படி அதி­காரம் உண்­டென்று நிரூ­பிக்கும்  வெளிப்­படுத்தும் சட்­ட­மூ­ளையே நம்­ம­வ­ருக்­குள்ள விநோ­தத்தை என்ன என்­பது?

ஒரே சின்­னத்தில் ஒரே அணி­யாகப் போட்­டி­யிட்டு மக்­களின் ஆத­ர­வுடன் அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்­றபின் ஒன்­றாக இணைந்து செயற்­பட முடி­யாத பிரச்­சி­னை­களைப் பேசித் தீர்த்­துக்­கொள்ள முடி­யாத நமது அர­சியல் தலை­மை­களால் நாம் நமது உரி­மை­களை வென்­றெ­டுக்க, உறு­திப்­ப­டுத்த முடி­யுமா? மக்கள் பிரச்­சி­னையை இனங்­கண்டு, அணுகி தீர்வு காண எத்­த­னிக்­காது, பத­வி­களை எவ்வாறு அடைவது? அதற்காக என்ன செய்வது? யாருடன் கூட்டுச்சேர்வது என்ற சிந்தனையில் மட்டுமே செயற்படும் நமது அரசியல்வாதிகளால் நமது சமூகம் அடையப்போகும் நன்மைகள் என்ன? சிந்திக்கவேண்டும். சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் அண்மித்து விட்டது. அரசியல் களப் போட்டியில் அரசியல்வாதிகள் ஆட ஆயத்தமாகிவிட்டார்கள். அவர்களது ஆட்டத்தை நாம் வேடிக்கை பார்த்து ரசிப்பது நமது சமுதாயப் பொறுப்பு. தகைமையும், திறமையும், ஆற்றலும், ஆளுமையும், சமுதாய நல உணர்வும் கொண்டவர்களை கட்சி மற்றும் அரசியல் பேதங்களுக்கப்பால் இனங்கண்டு அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒலிபெருக்கியைப் பிடித்துக்கொண்டு வீரவசனம் பேசிவிட்டால் தலைவர்க­ளாகிவிட முடியாது. சமூக நல்நோக்குடன் செயற்படும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாகச் செயற்படக்கூடியவர்களை காலம் தாழ்த்தாது அடையாளம் கண்டு நமது இருப்பை, பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்தகால செயற்பாடுகள் எமக்கு வழிகாட்டும் பாடங்களாக அமையட்டும். பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு செயற் படும் தலைமைத்துவங்களுக்கு உரமூட்டு வோம்.

- த.மனோகரன்