சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி  மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மூவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான தங்கூசி வலைகளை பயன்படுத்தி இப்பந் தீவு மற்றும் பெரிய அரச்சல் கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கண்ணாடி இழை படகு மற்றும் இரண்டு தங்கூசி வலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கைது செய்யப்பட்ட நபர்களை புத்தளம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவகத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.