(க.கிஷாந்தன்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் போற்றி தோட்ட ஆற்றுக்கு அண்மையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி நேற்றிரவு ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நோர்வூட் போற்றி தோட்ட அருகாமையில் இவர்கள் பல நாட்களாக இவ்வாறு சட்டவிரோதமாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நோர்வூட் போற்றி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் அவர்களை எதிர்வரும் தினங்களில் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.