இந்திய அணியின் தலைவராக  மகேந்திரசிங் டோனி காணப்பட்ட வேளை நாங்கள் துடுப்பாட்ட வரிசையில் எந்த ஒழுங்கில் விளையாடுவோம் என்பது எங்களிற்கு தெளிவாக தெரிந்திருந்தது என முன்னாள் வீரர் விரேந்திர செவாக் தெரிவித்துள்ளார்.

கேஎஸ் ராகுல் ரி20 போட்டிகளில் ஐந்தாவது வீரராக களமிறங்கி சிறப்பாக விiளாயாடவிட்டால் இந்திய அணியின் தற்போதைய நிர்வாகம் அவரை தொடர்ந்து அந்த ஒழுங்கில் வைத்திருக்காது என தான் கருதுவதாக செவாக் தெரிவித்துள்ளார்.

ஆனால் டோனியின் காலத்தில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை,என தெரிவித்துள்ள விரேந்திர செவாக் தானே நெருக்கடிகளை சந்தித்தவர் என்பதால் டோனிக்கு வீரர்கள் குறிப்பிட்ட வரிசையில் துடுப்பெடுத்தாட திணறும்போது அவர்களிற்கு ஆதரவளிப்பது எவ்வளவு அவசியம் என தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

டோனியின் தலைமைத்துவத்தின் போது அணிதெரிவில் தெளிவு காணப்பட்டது என சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தலைமையின் போது ஒவ்வொரு வீரரும் எந்த ஒழுங்கில் விளையாடவேண்டும் என்பதில் தெளிவு காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டோனி திறமையை இனம் காண்பவர்,அவர் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய இளம் வீரர்களை இனம் கண்டார்எனவும் சேவாக்  தெரிவித்துள்ளார்.

இளம்வீரர்களிற்கு நீங்கள் உரிய கால அவகாசத்தை வழங்காவிட்டால் அவர்கள் எப்படி தலைசிறந்த வீரர்களாக மாறுவார்கள் எனவும் செவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.