குழந்தைகளுக்கு தாய் பால் ஊட்டும் 120 நாடுகளில், இலங்கை முதலாவது இடத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பினால்  நடாத்தப்பட்ட ஆய்வின்போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.

பால் மா பாவனையினால் ஏற்படும் சுகாதார விளைவுகள் தொடர்பாக தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற தெளிவுபடுத்தும் நிகழ்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் யாசிங்க இங்கு உரையாற்றுகையில் பால்மா பாவனையை தடுப்பது தேக ஆரோக்கியத்துக்கு முக்கியமானதாகும் என்றும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் பயன்பாட்டின் காரணமாக சிறு குழந்தைகளைப் போன்று வளர்ந்தோரும் பெருமாளவில் தொற்றா நோய்க்கு உள்ளாகியிருப்பது அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக பால் மா பாவனை தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவு படுத்தப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.