இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது இதனால் வெளிநாட்டவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் முறை இத் திட்டம் ஊடாக மேலோங்க வேண்டியுள்ளது. என அவுஸ்திரேலியாவின் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் குழு தலைவர் டேவிட் சி அப்லெட் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று (20) இடம் பெற்ற சுற்றுலாத் துறை தொடர்பான திறன்கள் விருத்தி மூலோபாய செயற்திட்டத்தின் உணவுத் திருவிழா வைபவத்தினை திறந்து வைத்து இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இவ்வகை சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் நாம் செயற்திட்டங்களைச் செய்து வருகிறோம் இலங்கையில் ஏற்பட்ட கடந்த கால பயங்கரவாத தாக்குதலின் பின்பு பல சுற்றுலா பிரதேசங்கள் இயற்கையான இடங்கள் காணப்படுகின்றன இதனூடாக இளைஞர்களுக்கான சுற்றுலாத் துறையில் அதிக வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன் நாட்டின் அந்நியச் செலாவணிக்கும் பங்களிக்கிறது .

 

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் இத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகிறது. 

பாரம்பரிய உணவு தயாரிப்பு அதன் முறைகள் என்பன இங்கு சுப்ரீம் 2 திட்டம் ஊடாக நடை முறைப்படுத்தப்பட்டு வருவதுடன் இதனுடன் அரச நிறுவனங்களும் இணைந்துள்ளன ஹோட்டல் முகாமைத்துவம், உணவு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையினால் சுற்றுலா மூலோபாய திட்டங்கள் காணப்படுகிறது. 

உள்ளூர் உணவு உற்பத்தி முறைகளை எவ்வாறு சுற்றுலாப் பயணிகள் பெற்றுக் கொள்வது அதனை வாழை இலை,பனைஓலை, தாமரை போன்ற இயற்கையினால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம், பாரம்பரியமற்ற முறைகள் தொடர்பில் காட்டப்படுகிறது என்றார்.